சென்னை, ஏப்.19, 2026: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார்.
யார் அந்த அதிர்ஷ்டசாலி?
முன்னதாக, இந்தத் தொகுதிக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான அருண் குமாரின் வேட்புமனு, தொழில்நுட்பக் காரணங்களுக்காக தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட ஒரு அறிக்கையில், தனது ரசிகர் மன்றத்தின் முன்னாள் நிர்வாகியான கே. பிரேமகுமாருக்கு ஆதரவளிக்குமாறு சேலம் மாவட்ட வாக்காளர்களை விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.
விஜய் ஆதரவு
அவரை “நமது சொந்த சகோதரர்” என்று குறிப்பிட்ட விஜய், “தொலைக்காட்சிப் பெட்டி” சின்னத்தில் போட்டியிடும் பிரேமகுமாரை, கட்சியின் “உள்ளுணர்வு வேட்பாளராக” பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னத்தை முடக்கி, குறுக்கு வழியில் வெற்றியடைய முயன்றவர்களுக்குச் சரியான பாடத்தைப் புகட்டும் விதத்தில் இவரது வெற்றி அமையட்டும். இந்த வேண்டுகோள் ஒரு வலுவான அரசியல் செய்தியை அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டமன்ற தேர்தல்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பதிவான வாக்குகள் மே மாதம் 4ஆம் தேதி எண்ணப்படுகின்றன.
இதையும் படிங்க: திருச்சி கிழக்கில் விஜய் இன்று பரப்புரை.. ரசிகர்கள் உற்சாகம்!
VBJ Bangle Fest: 10,000-க்கும் மேற்பட்ட வளையல் வடிவமைப்புகளுடன் ‘தி பேங்கிள் பியூட்டீஸ்’ விழாவை VBJ அறிமுகப்படுத்தியுள்ளது. செப்டம்பர் 5 முதல் அக்டோபர் 5 வரை நடைபெறும்…
Sandeep Tandon: சந்தீப் டாண்டன் உருவாக்கிய குவாண்டு மியூச்சுவல் ஃபண்ட் இன்று ரூ.1 லட்சம் கோடி சொத்துகளை நிர்வகிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது….
Delhi Police facial recognition; ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தில், முகம் அடையாளம் காணும் கேமரா தொழில்நுட்பத்தின் மூலம், குற்றவாளிகள் சிலர் கண்டறியப்பட்டுள்ளனர்….
Modi on Growth: இந்தியாவின் 7.8 சதவீத பொருளாதார வளர்ச்சி 140 கோடி மக்களின் கடின உழைப்பு மற்றும் கூட்டு உறுதியின் பிரதிபலிப்பு என பிரதமர் நரேந்திர…
Mettur Dam Open: காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவைக்காக மேட்டூர் ஸ்டான்லி நீர்த்தேக்கத்தின் மதகுகளை தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று தண்ணீர் திறந்து…
Vijay Vs RahulGandhi : தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ்– தமிழக வெற்றிக் கழகம் இடையே பிளவு உருவாகும் சூழ்நிலை அதிகரித்துள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்