விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. 23 பேர் பரிதாப மரணம்!

TN firecracker factory blast : தமிழக பட்டாசு தொழிற்சாலை வெடிப்புச் சம்பவத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Published on: April 19, 2026 at 10:11 pm

விருதுநகர், ஏப்.19, 2026: விருதுநகர் அருகே உள்ள கட்டனார்பட்டி கிராமத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தித்தனர்.

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில், குறைந்தது 23 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர். மீட்புக் குழுக்கள் இடிபாடுகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையன்று, விதிமுறைகளை மீறி தொழிற்சாலை இயங்கியதால், அங்கு விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: வீட்டின் வெளியே துணி காயப்போட்ட பெண்.. அத்துமீறிய வி.சி.க பிரமுகர்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com