இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி.. இங்கிலாந்து அபார வெற்றி!

England Beat India: இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 3 போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து 1-1 என சமன் செய்தது.

Published on: July 17, 2026 at 12:18 pm

லண்டன், ஜூலை 17, 2026: கார்டிஃப் நகரில் உள்ள சோபியா கார்டன்ஸில் நேற்றிரவு (ஜூலை 16, 2026) நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில், இங்கிலாந்து அணி இந்தியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 1-1 என சமன் செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 44 ஓவர்களில் 233 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் 66 ரன்களும், விராட் கோலி 65 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் கஸ் அட்கின்சன் தலா 3 விக்கெட்டுகளையும், சாகிப் மஹ்மூத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு ஆடிய இங்கிலாந்து அணி 45-வது ஓவரிலேயே இலக்கை எளிதாக எட்டியது. ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 99 ரன்கள் குவித்து, வெறும் ஒரு ரன் வித்தியாசத்தில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இந்திய அணியில் குர்னூர் பிரார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

வெற்றியைத் தந்த சிறப்பான ஆட்டத்திற்காக ஜோ ரூட் ‘ஆட்ட நாயகன்’ விருதை வென்றார். இப்போது இரு அணிகளும் ஞாயிற்றுக்கிழமை புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள தொடரைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

இதையும் படிங்க : ஃபிஃபா உலக கோப்பை.. இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற அர்ஜென்டினா!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com