DMK councillor’s son arrested: தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை செய்ததாக, திமுக பெண் கவுன்சிலரின் மகன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
DMK councillor’s son arrested: தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை செய்ததாக, திமுக பெண் கவுன்சிலரின் மகன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
Published on: April 10, 2025 at 12:24 pm
தூத்துக்குடி ஏப்ரல் 10 2025: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மட்டக்கடை ராமர்விளை பகுதியில், தூத்துக்குடி வடபாகம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகம் படும்படியாக நின்று கொண்டிருந்த நான்கு பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, போலீசார் அவர்களை கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி நயினார் விளையைச் சேர்ந்த இமானுவேல் சுரேஷ்குமார் என்பவரது மகன் ஜெர்சன் என்பதும் மற்ற மூவர் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக், சத்தியசீலன் மற்றும் ஹரி பிரபாகர் என்பது தெரியவந்தது. இதில் ஜெர்சனின் தாயார் திமுக பெண் கவுன்சிலராக உள்ளார்.
இந்த நிலையில் ஜர்சனின் தாயார் மரிய கீதா இது தொடர்பாக காவல் நிலையம் சென்று போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜெர்சனின் தாயார் மரிய கீதா மீது இந்து மக்கள் கட்சி சார்பில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க மத்திய அமைச்சரின் பேத்தி சுட்டுக் கொலை..என்ன நடந்தது?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com