Minister’s granddaughter shot dead: பீகாரில் மத்திய அமைச்சர் ஜித்தன் மஞ்சியின் பேத்தி அவரது கணவரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Minister’s granddaughter shot dead: பீகாரில் மத்திய அமைச்சர் ஜித்தன் மஞ்சியின் பேத்தி அவரது கணவரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Published on: April 9, 2025 at 9:26 pm
பீகார், ஏப்ரல் 09 2025: பீகாரில் உள்ள கயா மாவட்டத்தில் உள்ள அடாரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட டெட்டுவா கிராமத்தில் இன்று மத்திய அமைச்சர் ஜித்தன் ராம் மஞ்சியின் பேத்தி சுஷ்மா தேவி அவரது கணவரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார். அவர் வாட் ஆர் யூ தொகுதியில் விகாஸ் மித்ராவாக பணிபுரிந்து வந்துள்ளார். அவர்கள் கலப்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி மகத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ரமேஷ் இன்று வீடு திரும்பியதும், சுஷ்மாவை வலுக்கட்டாயமாக அறைக்கு இழுத்து சென்று பூட்டி மார்பில் சுட்டதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் தொழில்நுட்ப பிரிவின் உதவியுடன் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குற்றவாளி தலைமறைவாகியுள்ள நிலையில் விரைவில் கைது செய்யப்படுவார் என்று கையா எஸ். எஸ். பி. ஆனந்த் குமார் தெரிவித்தார்.
மேலும் சம்பவம் குறித்து உயிரிழந்தவரின் சகோதரி பூனம் குமாரி கூறுகையில், ரமேஷ் வெளியில் இருந்து வந்தான். திடீரென்று வீட்டுக்குள் சென்று என் சகோதரியை அறையில் வைத்து பூட்டிவிட்டு அவளை சுட்டான். பின்னரை் அவன் ஓடி விட்டான். அவனுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கூறினார்.
ரமேஷுக்கு சுஷ்மா மீது ஏற்கனவே சந்தேகம் இருந்ததாகவும் இதனால் அவர்களுக்குள் அடிக்கடி சச்சரவு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. அவர் மீது இருந்த கோபத்தின் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் சம்பவத்திற்கான காரணத்தை போலீசார் இன்னும் தெளிவுபடுத்தவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க பெங்களூருவில் நடந்து சென்ற பெண் மானபங்கம்: ‘இதுவரை புகார் இல்லை’ என்கிறது காவல்துறை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com