Death During Home Birth: கேரளாவில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில் பிரபல யூடியூபரின் மனைவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Death During Home Birth: கேரளாவில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில் பிரபல யூடியூபரின் மனைவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Published on: April 9, 2025 at 4:41 pm
திருவனந்தபுரம், ஏப்ரல் 09 2025: கேரள மாநிலம் பெரும்பாவூரை சேர்ந்த சிராஜுதீன் என்பவர் யூடியூபில் மத சொற்பொழிவாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பதற்கு ஆதரவாக பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இவருடைய கருவுற்றிருந்த மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு ஏற்கனவே நான்கு குழந்தைகள் உள்ள நிலையில் முதல் இரண்டு குழந்தைகள் மட்டுமே மருத்துவமனையில் பிறந்துள்ளன. அடுத்த இரண்டு குழந்தைகள் வீட்டிலேயே பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐந்தாவது முறையாக கருவுற்றிருந்த சிராஜுதீனின் மனைவி அஸ்மா வுக்கு பிரசவலி ஏற்பட்டுள்ளது. பிரசவ வலியால் மனைவி அஸ்மா அலறிய நிலையில் அதைப் பற்றிய சிறிதும் கவலைப்படாமல் மனைவிக்கு வீட்டிலேயே சிராஜுதீன் பிரசவம் பார்த்துள்ளார். அவர் விருப்பப்பட்டது போலவே அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
ஆனால் குழந்தை பிறந்த பிறகு அஸ்மாவிற்கு அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் தன்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கணவரிடம் அஸ்மா கெஞ்சி உள்ளார். ஆனால் சிராஜுதீன் பிரசவ வலி அப்படித்தான் இருக்கும் என கூறி மனைவியை கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் கிட்டத்தட்ட மூன்று மணி நேரமாக படுக்கையிலேயே மூச்சு திணறியபடி இருந்த அஸ்மா பரிதாபமாக உயிரிழந்தார். அஸ்மா உயிரிழந்ததை அறிந்து அதிர்ச்சடைந்த சிராஜுதீன் இது குறித்து தகவல் வெளியே தெரியாதபடி இருந்துள்ளார். ஆனால் மரணம் குறித்து விசாரிக்க வந்த போலீசார் சிராஜுதீனிடம் நடத்திய விசாரணையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில் தான் அவர் உயிரிழந்தார் என்பது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிராஜூதீனை கைது செய்தனர்.
வீட்டில் பிரசவம் பார்க்கப்பட்டு பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க பெங்களூருவில் நடந்து சென்ற பெண் மானபங்கம்: ‘இதுவரை புகார் இல்லை’ என்கிறது காவல்துறை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com