Food: இந்த சம்மருக்கு குழந்தைகளுக்கு பிடித்த சூப்பரான கேரட் புட்டிங் ரெசிபி இப்படி செஞ்சு கொடுங்க.
Food: இந்த சம்மருக்கு குழந்தைகளுக்கு பிடித்த சூப்பரான கேரட் புட்டிங் ரெசிபி இப்படி செஞ்சு கொடுங்க.
Published on: April 9, 2025 at 2:41 pm
குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய கேரட் புட்டிங் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அகர்அகர் – 6 கிராம்
பால் -½ லிட்டர்
கேரட் -3
கன்டென்ஸ் மில்க் -½ கப்
வெண்ணிலா எசன்ஸ் -¼ டீஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் அகர்அகரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும். இவை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஒரு அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் சேர்க்காத கெட்டியான பால் எடுத்துக் கொள்ளவும். பால் காய்ந்து பொங்கி வந்ததும் அடுப்பு தீயை லோ பிளேமில் வைத்து இதனுடன் வட்ட வடிவில் நறுக்கிய கேரட் துண்டுகளை சேர்க்க வேண்டும்.
கேரட் வெந்து வந்த பின்னர் சூடு நீங்கியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மை போன்று அரைக்கவும். பின்னர் கேரட்டுடன் வேகவைத்த பாலையும் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் அகரகர் ஊறவைத்த பாத்திரத்தை ஹை ஃபிளேமில் வைத்து சூடாகி அகரகரை நன்கு கலந்து விட்டு கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இதையும் படிங்க மட்டன் சுவையில் காலிஃபிளவர் கோலா உருண்டை கிரேவி – இப்டி செஞ்சு பாருங்க!
அகரகர் கரைந்த பின்னர் இதனுடன் கன்டென்ஸ் மில்க் சேர்த்து கலந்து விடவும். கன்டென்ஸ் மில்க் பதிலாக அரை கப் சர்க்கரையும் பயன்படுத்தலாம். பின்னர் இதனுடன் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலந்து விடவும். அடுப்பு தீயை லோ பிளேமில் வைத்து இதனுடன் ஏற்கனவே தயார் செய்து வைத்த கேரட் விழுதை சேர்த்து கலந்து விடவும். நன்கு கலந்த பின்னர் ஹை ஃப்ளேமில் வைக்கவும்.
ஒரு கொதி வந்த பின்னர் அடுப்பு தீயை ஆப் செய்து தயார் செய்து வைத்த கலவையை ஒரு டிரேயில் நெய் தடவி சூடாகவே அதில் ஊற்ற வேண்டும். காற்று குமிழி தோன்றினாள் ஒரு ஸ்பூனை வைத்து அதை உடைத்து சமன் செய்து கொள்ளவும். இவை நன்றாக ஆரிய பின்னர் பிரிட்ஜில் வைக்கவும். ஃப்ரீசரில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு மணி நேரத்திற்கு பின்னர் எடுத்து பரிமாறலாம். இப்போது சுவையான மற்றும் ஹெல்தியான கேரட் புட்டிங் தயார்.
இதையும் படிங்க ருசி அள்ளும் கருப்பு கடலை கறி குழம்பு.. இப்படி செஞ்சு அசத்துங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com