பல்கலைக்கழக வேந்தர் முதலமைச்சர்தான்.. அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss: “பல்கலை. வேந்தர் முதலமைச்சர் தான். உச்சநீதிமன்றமே உறுதி செய்த பின்னர் உயர்கல்வி அமைச்சர் குழப்பக் கூடாது. துணைவேந்தர்களை விரைந்து நியமிக்க நடவடிக்கை தேவை” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Published on: May 27, 2026 at 3:36 pm

சென்னை, மே 27, 2026: பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் விஜய் இன்று (புதன்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக முதலமைச்சர் தான் இருக்க வேண்டும் என்ற முந்தைய திமுக அரசின் நிலைப்பாட்டை இப்போதுள்ள த.வெ.க. அரசும் ஏற்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை; இந்த விவகாரத்தில் முதலமைச்சர் இறுதி முடிவு எடுப்பார் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிக்கலாம் என்று தமிழக சட்டப்பேரவையில் முந்தைய திமுக ஆட்சியின் வெவ்வேறு காலகட்டங்களில் 10 சட்ட முன்வரைவுகள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், அந்த 10 சட்ட முன்வரைவுகளுக்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்காமலும், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியும் தாமதப்படுத்தி வந்த நிலையில், அவற்றுக்கு ஒப்புதல் அளிக்கும்படி ஆளுனருக்கு ஆணையிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக அரசு வழக்குத் தொடர்ந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, “அதை விசாரித்த உச்சநீதிமன்றம் அரசியலமைப்புச் சட்டத்தின் 142-ஆம் பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக முதலமைச்சரை நியமிக்கும் சட்ட முன்வரைவுகளுக்கு ஒப்புதல் அளித்து விட்டது. அதன்படி இன்றைய சூழலில் தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தர் முதலமைச்சர் தான். இதில் எந்த ஐயமும் இல்லை.

அந்த சட்டங்களை செல்லாது என்று அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை முழுமையாக விசாரிக்காத சென்னை உயர்நீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வு , அந்த சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்தது. அதையும் செல்லாது என தீர்ப்பளித்து விட்ட உச்சநீதிமன்றம், அந்த வழக்கை 6 வாரங்களில் விசாரித்து தீர்ப்பளிக்கும்படி ஆணையிட்டுள்ளது. இத்தகைய சூழலில், தமிழக அரசு செய்ய வேண்டியதெல்லாம் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடித்து நடைமுறைக்கு கொண்டு வருவது தான். அதன் மூலம் தான் பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை விரைவாக நியமிக்க முடியும்.

மாறாக, தமிழக அரசு சட்டங்களின் வாயிலாகவும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலமும் உறுதி செய்யப்பட்ட தமிழ்நாட்டு அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தர் முதலமைச்சர் தான் என்ற நிலைப்பாட்டை மாற்ற புதிய அரசு எந்த முயற்சியும் செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் அது மாநில அரசின் உரிமைகளை தாரை வார்த்ததாக அமைந்து விடும்” எனவும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ‘மயக்க பிஸ்கெட்டு’களை மக்களுக்குத் தந்தால், பிரச்சினைகள் தீருமா? கி. வீரமணி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com