‘ஒன்றும் தெரியாமல் பேச வேண்டாம் விஜய்’: தமிழிசை சௌந்தரராஜன்!

Tamilisai Soundararajan: சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்த விஜய்யின் கருத்துக்கு தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Published on: April 8, 2025 at 10:54 pm

சென்னை, ஏப்ரல 8 2025: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ₹50 உயர்ந்துள்ள நிலையில் அதனை கண்டித்து தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் சமையல் எரிவாயு விலை உயர்வு சாமானிய மக்கள் மீதான நேரடி தாக்குதல் என்றும் மக்களை இது மேலும் வாட்டி வதைக்கும் நடவடிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பொய் வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றி வாட்டி வதைப்பதில் ஒன்றிய பாஜக அரசும், திமுக அரசும் இணைந்த கைகள் ஆகவும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாகவும் செயல்படுகின்றன.

கேஸ் சிலிண்டர் ரூபாய் 100 மானியம் கொடுப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக அரசு நான்கு ஆண்டுகளை கடந்தும் எதுவும் செய்யவில்லை .தேர்தல் வெற்றிக்காக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து பின்னர் மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ஏமாற்றி வருகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இதுகுறித்த கேள்விக்கு, விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் விஞ்ஞானப்பூர்வமாக எதாவது இருக்கிறதா?.

demonetization மூலம் கருப்பு பணத்தை பிரதமர் ஒழித்தார். அப்படி திரைத்துறையில் பிளாக் டிக்கெட் ஒழிக்கப்பட்டதா? அதை கட்டுப்படுத்தினீர்களா? நீங்கள் சினிமாவில் பிளாக்கில் டிக்கெட் விற்கிறீர்கள். சினிமா டிக்கெட் விலையை உயர்த்தினீர்கள். உள்ளே பாப்கார்ன் கூட உயர்த்தித்தான் விற்கிறீர்கள்.

விஜய் படங்களின் டிக்கெட் விலை என்ன? பாமர மக்களுக்காக நடிக்கிறேன் அவர்கள் பொழுதுபோக்கிற்காகவே நடிக்கிறேன் என்று கூறுகிறீர்களே. குறைந்த விலையிலோ, இலவசமாகவோ, டிக்கெட் கொடுக்கிறேன் என இருக்க வேண்டியதுதானே? யார் தடுத்தார்கள்? உங்களுக்கு லாபம் என்றால் பேச மாட்டீர்களா?

ஒன்றும் தெரியாமல் விஜய் போன்றோர் பேச வேண்டாம். விஜய்க்கு சினிமாவில் நடிக்கவும், வசனம் பேசவும், நடனம் ஆடவும், ஏமாற்றுவும் தான் தெரியும் .அரசியலோ, பொருளாதாரமோ தெரியாது. சர்வதேச சந்தையில் 60 சதவீதத்திற்கு மேல் கேஸ் விலை ஏற்றம் செய்யப்பட்டதால் இந்த விலையேற்றம் நிகழ்ந்துள்ளது.

அதோடு ஒப்பிடுகையில் இந்த விலையேற்றம் மிகக் குறைவானது தான். இருப்பினும் விலையை குறைக்க வலியுறுத்துவோம் சிலிண்டர் விலையை ரூ.50 உயர்த்தப்பட்டதை திரும்ப பெறுமாறு மத்திய பெட்ரோலிய துறை அமைச்சருக்கு கடிதம் எழுதவிருக்கிறோம் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க Tamil News Highlights April 8 2025: ஏப்ரல் 14 வரை மழைக்கு வாய்ப்பு

கட்சிப் பொறுப்பில் நீக்கப்பட்டவர், அமைச்சரவையில் தொடரலாமா? பொன்முடி விவகாரத்தில் வானதி கேள்வி..!
Vanathi Srinivasan

கட்சிப் பொறுப்பில் நீக்கப்பட்டவர், அமைச்சரவையில் தொடரலாமா? பொன்முடி விவகாரத்தில் வானதி கேள்வி..!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com