ED பிடியில் செந்தில் பாலாஜி.. ஒ.கே சொல்வாரா விஜய்? பரபரப்பு தகவல்கள்!

Senthil Balaji Fraud Case : செந்தில் பாலாஜி மீதான மோசடி விவகாரத்தில் அமலாக்கத்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்துகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Published on: May 19, 2026 at 7:39 pm

சென்னை, மே 19, 2026: தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்த வழக்கில், முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி, அமலாக்கத் துறை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சாய் குமாருக்கு மே 15 அன்று மூன்று பக்க கடிதம் அனுப்பியுள்ளது. இதில் ஆதாரங்கள், ரகசிய விசாரணை குறிப்புகள் மற்றும் புகார் நகல் அடங்கிய பென் டிரைவ் இணைக்கப்பட்டுள்ளது.

வழக்கின் பின்னணி

2011–2016 காலகட்டத்தில் அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் சட்டவிரோதமாக பணம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதன்பேரில் அவர், அவரது சகோதரர் அசோக் குமார் மற்றும் உதவியாளர்கள் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.

கைது மற்றும் பிணை

இந்த வழக்கில் 2023 ஜூன் மாதம் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். பின்னர் 2024 செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியதை அடுத்து அவர் விடுதலையானார். அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தாலும், அவர் அமைச்சராக இருந்த காலகட்டம் என்பதால் மாநில அரசின் விசாரணை அனுமதி அவசியமாகக் கருதப்படுகிறது.

அனுமதி வழங்கப்படுமா?

முன்னதாக திமுக அரசு அனுமதி மறுத்திருந்த நிலையில், தற்போது அமலாக்கத் துறை நேரடியாக தலைமைச் செயலாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், புதியதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம், முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, செந்தில் பாலாஜி மீது உரிய விசாரணை நடத்த அனுமதி வழங்குமா எனற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பணத்தின் அடிப்படையில் பாரபட்சம்.. கோவில்களில் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com