சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் நியமனம்.. முழு விவரம்!

Madras High Court Judges : சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Published on: May 19, 2026 at 9:56 pm

Updated on: May 19, 2026 at 9:57 pm

சென்னை, மே 19, 2026: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 19 பேரை புதிய நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது. தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை அமர்வுக்கு 75 நீதிபதி பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில் 23 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றை நிரப்பும் வகையில் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாவட்ட நீதிபதிகள் மற்றும் தலைமை பதிவாளர் உள்ளிட்ட 9 பேர், வழக்கறிஞர்கள் 10 பேர் என மொத்தம் 19 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. இவர்கள் அனைவருக்கும் கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நியமனம், வழக்குகளின் அதிகபட்ச சுமையை குறைத்து, நீதிமன்ற செயல்பாடுகளை விரைவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கறிஞர்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்திய கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய பெயர்கள் பட்டியலில் யார் யார்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com