ருத்ரதாண்டவம் ஆடிய சூர்யவன்ஷி.. ப்ளே ஆஃப் பக்கம் திருப்பிய ராஜஸ்தான் ராயல்ஸ்!

Sooryavanshi’s Heroics : ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்பாராத விதமாக ப்ளே ஆஃப் பக்கம் திரும்பியுள்ளது; காரணம், 15 வயதான இளம்புயல் வைபவ் சூர்யவன்ஷி.

Published on: May 20, 2026 at 9:38 am

புதுடெல்லி, மே 20, 2026: 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸை பிளே-ஆஃப்ஸ் நோக்கி அழைத்துச் செல்கிறது. இந்த இளம் வீரர் சூர்யவன்ஷி, 38 பந்துகளில் 93 ரன்கள் குவித்து, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நிர்ணயித்த 221 ரன்கள் இலக்கை எளிதில் அடையச் செய்தார்.

வைபவ் சூர்யவன்ஷி அதிரடி

இந்தப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 38 பந்துகளில் 93 ரன்கள் அடித்தார். அவர் 10 சிக்ஸர்கள் அடித்து, ரசிகர்களை மெய்மறக்கச் செய்தார். மேலும், 14வது ஓவரில் அவுட் ஆனாலும், அதற்குள் போட்டியை ராஜஸ்தான் ராயல்ஸ் பக்கம் திருப்பினார்.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் தோல்வி

முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தரப்பில், மிட்செல் மார்ஷ் (96 ரன்கள்) மற்றும் ஜோஷ் இங்லிஸ் (60 ரன்கள்) ஆகியோர் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இருவரின் இந்த அதிரடி ஆட்டத்தால் லக்னோ அணி 220/5 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. இதனை நொறுக்கி, வைவப் ராஜஸ்தான் அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்துள்ளார்.

ப்ளே ஆஃப் சுற்று

இந்த வெற்றியால் ராஜஸ்தான் ராயல்ஸ் 14 புள்ளிகள் பெற்று, புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியது. மேலும், பஞ்சாப் கிங்ஸ்-ஐ யும் பின்னுக்கு தள்ளியது. இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அடுத்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-ஐ எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் ஆர்.ஆர் வெற்றி பெற்றால் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறுவது உறுதியாகிவிடும்.

கிறிஸ் கெயில் சாதனை…

சூர்யவன்ஷி, 53 சிக்ஸர்கள் அடித்து, கிறிஸ் கேய்லின் (59) சாதனையை முறியடிக்க நெருங்கியுள்ளார்.
மேலும், இந்த வெற்றியால் ராஜஸ்தான் ராயல்ஸ் ரசிகர்களுக்கு புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தீபிகா குமாரி இல்லை.. ஏன்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com