DoPT: பெண் அரசு ஊழியர்கள் இப்போது குடும்ப ஓய்வூதியத்திற்கு கணவருக்கு பதிலாக குழந்தைகளை பரிந்துரைக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
DoPT: பெண் அரசு ஊழியர்கள் இப்போது குடும்ப ஓய்வூதியத்திற்கு கணவருக்கு பதிலாக குழந்தைகளை பரிந்துரைக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Published on: April 8, 2025 at 10:17 pm
பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, பெண் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் சில சந்தர்ப்பங்களில் குடும்ப ஓய்வூதியத்திற்கு தங்கள் கணவருக்குப் பதிலாக தங்கள் குழந்தைகளை பரிந்துரைக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதனை அனுமதிக்கும் ஒரு புதிய விதியையும் தற்போது பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து வெளியான அறிவிப்பில், ஒரு பெண் பணியாளர் அல்லது பெண் ஓய்வூதியதாரரை விவாகரத்து செய்வது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தால் இது பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பணியாளர் அல்லது பெண் ஓய்வூதியதாரர் தனது கணவருக்கு எதிராக குடும்ப வன்முறையிலிருந்து பெண்கள் பாதுகாப்புச் சட்டம் அல்லது வரதட்சணை தடைச் சட்டம் அல்லது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்திருந்தாலும் இது பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, இத்தகைய பெண் பணியாளர் அல்லது பெண் ஓய்வூதியதாரர் தனது மரணத்திற்குப் பிறகு தனது தகுதியான குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க கோரிக்கை வைக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த உத்தரவு, குறிப்பாக விவாகரத்து பெறும் நிலையில் உள்ள பெண்களுக்கு அல்லது குடும்ப வன்முறை, வரதட்சணை துன்புறுத்தல் அல்லது பிற சட்டப் பிரிவுகளின் கீழ் தங்கள் கணவர் மீது வழக்குத் தொடர்ந்த பெண்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனால், இப்போது அத்தகைய பெண்கள் கணவரை குடும்ப ஓய்வூதியத்தின் முதன்மை பயனாளியாக மாற்றாமல் தங்கள் குழந்தைகளை நேரடியாக அதற்கு உரிமையாளராக மாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம்.. இன்றும் விலை குறைவு..உடனே செக் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com