Sarathkumar | ரத்தன் டாட்டா மறைவுக்கு சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Sarathkumar | ரத்தன் டாட்டா மறைவுக்கு சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Published on: October 10, 2024 at 1:21 pm
Sarath kumar | தொழிலதிபர் ரத்தன் டாட்டா மறைவுக்கு சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாட்டா அவர்கள் உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது மிகுந்த மனவேதனையளிக்கிறது.
இந்தியா மற்றும் உலக வணிகத்தில் முக்கிய பங்கு வகித்து அசைக்க முடியாத பொருளாதார வளர்ச்சி காணச் செய்து, நவீன இந்தியாவின் மேம்பாட்டிற்கு முன்னோடியாக இருந்து வழிநடத்தியவர். இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில்துறையில் மட்டுமல்ல, எண்ணற்ற தொழில் துறைகளில் பல்வேறு சாதனைகள் புரிந்தவர்.
இந்தியாவின் மிக உயரிய விருதுகளான பத்மபூஷண், பத்மவிபூஷண் பெற்ற ரத்தன் டாடா அவர்கள் என்றென்றும் முனைவோர்களுக்கு நிலைபெற்றிருப்பார். நம்பிக்கை நட்சத்திர நாயகனாக, தனது வருவாயில் 60 65% எளியவர்க்கு வழங்கி, உலகின் மிகப்பெரிய தொண்டு புரிபவர்களில் ஒருவராகவும், இரக்க குணம் கொண்டவராகவும், எளிமையான அணுகுமுறையும், பண்பும் கொண்ட பார்போற்றும் ஒப்பற்ற மனிதரின் மறைவு தேசத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
சர்வதேச வணிகத்தில் ஆளுமையாக திகழ்ந்து, தேசத்தை துயரத்தில் ஆழ்த்தி மறைந்திருக்கும் அவரது குடும்பத்தார்க்கும் உற்றார், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும், தொழில் துறையினருக்கும், அவரை பின்பற்றும் லட்சக்கணக்கான அன்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
சர்வதேச பொருளாதாரத்தில், இந்தியாவின் முன்னோடியாக மாபெரும் முக்கிய பங்கு வகித்த ரத்தன் டாடா என்னும் மாமனிதரின் இறுதிச் சடங்கை அரசு மரியாதையுடன் மேற்கொள்ள வேண்டுகோள் முன்வைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க தொழிலதிபர் ரத்தன் டாட்டா மறைவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com