Rajnath Singh Panagudi Visit : திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பணகுடி பகுதியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஏப்.19, 2026) பரப்புரை மேற்கொள்கிறார்.
Rajnath Singh Panagudi Visit : திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பணகுடி பகுதியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஏப்.19, 2026) பரப்புரை மேற்கொள்கிறார்.

Published on: April 19, 2026 at 11:24 am
Updated on: April 19, 2026 at 11:26 am
திருநெல்வேலி, ஏப்.19, 2026: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பரப்புரை மேற்கொள்கிறார். அப்போது, அவர் சாலைவலம் செல்வார் என்ற தகவலும் உறுதியாகியுள்ளது. திருநெல்வேலியை பொறுத்தமட்டில், ராதாபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் எஸ்.பி பாலகிருஷ்ணனை ஆதரித்து திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஏப்.19, 2026) பரப்புரை மேற்கொள்கிறார்.
தென்காசியை பொறுத்தமட்டில், தென்காசி சிந்தாமணி பகுதியில் இருந்து காமராஜர் சிலை வரை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வாகன பேரணியில் ஈடுபட உள்ளார்.
மேலும், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்
சட்டமன்ற தேர்தல்
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பதிவான வாக்குகள் மே மாதம் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வும், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸூம் அங்கம் வகிக்கின்றன. நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தனித்து களம் காண்கின்றன.
இதையும் படிங்க: கோவையில் தி.மு.க. ஒரு சீட் கூட ஜெயிக்க கூடாது.. வானதி சீனிவாசன்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com