Vanathi Srinivasan: கோவையில் தி.மு.க. ஒரு சீட் கூட ஜெயிக்க கூடாது என வானதி சீனிவாசன் கூறினார்.
Vanathi Srinivasan: கோவையில் தி.மு.க. ஒரு சீட் கூட ஜெயிக்க கூடாது என வானதி சீனிவாசன் கூறினார்.

Published on: April 19, 2026 at 10:58 am
Updated on: April 19, 2026 at 11:16 am
கோவை, ஏப்.19, 2026: பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் வானதி சீனிவாசன் கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் இவருக்கு கடந்த சில தினங்களுக்கு உடல் நலப் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, வானதி சீனிவாசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தற்போது அவர் நலமுடன் பரப்புரைக்கு திரும்பியுள்ளார். இந்த நிலையில், கோவையில் தி.மு.க. ஒரு சீட் கூட ஜெயிக்கக் கூடாது எனக் கூறியுள்ளார்.
வானதி பரப்புரை
கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களிடம் வாக்கு சேகரில் ஈடுபட்ட வானதி சீனிவாசன், “நான் மருத்துவமனையில் இருந்த போது, எனக்காக பரப்புரை செய்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
தொடர்ந்து, “கோவையில் ஒரு சீட்டில் கூட தி.மு.க. வெற்றிப் பெறக் கூடாது” என்றார். கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார்.
சட்டமன்ற தேர்தல்
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பதிவான வாக்குகள் மே மாதம் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதையும் படிங்க: சாதாரண பெண்கள் முன்னேற்றத்தை கண்டு தி.மு.க.வுக்கு ஏன் பயம்? பிரதமர் மோடி கேள்வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com