தமிழ்நாட்டில் ஜில்ஜில் ஆகப்போகும் 21 மாவட்டங்கள்.. தஞ்சை இருக்கு.. முழு விவரம்!

Rain Alert: தமிழ்நாட்டில் செப்.21ஆம் தேதி திங்கள்கிழமை 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Published on: September 20, 2026 at 7:30 pm

சென்னை, செப்.20, 2026: தமிழகத்தில் 21 மாவட்டங்களில் நாளை கனமழை பெற்றும் என்றும் கடலோரப் பகுதிகளில் 50 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக திங்கள்கிழமை (செப்.21) நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கான மாவட்ட வாரியான வானிலை எச்சரிக்கைகளையும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வருகிறது.

மேலும், நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களாக நீலகிரி, கோயம்புத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை, கடலூர், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய 21 மாவட்டங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடலோரப் பகுதிகளில் கடல் நிலவரத்தைப் பொறுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்லும் போது வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தல்களை கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

வானிலை மாற்றத்துக்கு முக்கிய காரணமாக வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி குறிப்பிடப்பட்டுள்ளது. செப்.19-ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் உருவான இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து செப்.20-ஆம் தேதி காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவி வருகிறது.

இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, செப்.21-ஆம் தேதி மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து செப்.22-ஆம் தேதி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதையும் படிங்க : திருவனந்தபுரம்–தாம்பரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு.. முழு விவரம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com