தமிழ்நாட்டில் முதல் முறை வாக்காளர்கள் 34 சதவீதம் அதிகரிப்பு.. இவர்கள் ஆதரவு யாருக்கு?

Assembly Election 2026 : தமிழ்நாட்டில் முதல் முறையாக வாக்களிக்க உள்ளவர்களின் எண்ணிக்கை 34% அதிகரித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுன்ளது.

Published on: April 8, 2026 at 12:52 pm

சென்னை, ஏப்.8, 2026: தமிழ்நாட்டில் 2024 லோக்சபா தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடுகையில், 2026 சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க உள்ளவர்களின் எண்ணிக்கை 34% அதிகரித்துள்ளது.

பெண் வாக்காளர்கள் அதிகரிப்பு

இந்த முதல் முறை வாக்காளர்கள் 18–19 வயது கொண்டவர்கள் ஆவார்கள். இந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2024 தேர்தலில் 10.9 லட்சமாகவும், 2026 சட்டமன்ற தேர்தலில் 14.6 லட்சமாகவும் காணப்படுகிறது. இதன் உயர்வு சுமார் 34 சதவீதம் ஆகும். மேலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்த வாக்காளர்கள் 2024ல் 5.67 கோடியாக காணப்பட்டனர். தற்போது, 2026ல், 5.73 கோடியாக காணப்படுகின்றனர். இதில், மொத்த வாக்காளர்களில் 51% பெண்கள் ஆவார்கள். இது, ஆண்களை விட 12 லட்சம் அதிகம் ஆகும்.

இந்நிலையில், புதிய வாக்காளர்களின் அதிகரிப்பு, Gen Z வாக்காளர்கள் தேர்தல் முடிவில் முக்கிய பங்கு வகிக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். மேலும், பெண்கள் அதிகம் இருப்பதால், அரசியல் கட்சிகள் பெண்கள் நலன், பாதுகாப்பு, அதிகாரமளிப்பு போன்ற திட்டங்களை வலுப்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது.

இதையும் படிங்க: சீர்காழிக்கு மட்டும் நான் மாப்பிள்ளை.. அப்படி ஏன் சொன்னார் மு.க ஸ்டாலின்?

என் தந்தையைப் போல் தாயையும் வெற்றிப் பெற செய்யுங்கள்.. விருத்தாசலத்தில் சண்முகப் பாண்டியன் பரப்புரை! Assembly Election 2026

என் தந்தையைப் போல் தாயையும் வெற்றிப் பெற செய்யுங்கள்.. விருத்தாசலத்தில் சண்முகப் பாண்டியன்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com