த.வெ.க வேட்பாளர் மாயம்.. வேட்புமனு நிராகரிப்பு ஏன்? அதிகாரி விளக்கம்!

Assembly Election 2026 : சேலத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published on: April 8, 2026 at 1:12 pm

சேலம், ஏப்.8, 2026: சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்.7, 2026) வேட்புமனுக்கள் ஆய்வு நடைபெற்றது. அப்போது, த..வெ.க (TVK) வேட்பாளர் எம். அருண்குமார் மாயமானதால் பதற்றமான சூழல் நிலவியது. காலை அவர் அலுவலகத்தில் இருந்ததாகக் கூறிய கட்சித் தொண்டர்கள், பின்னர் அவர் மாயமானதாகவும், ஆய்வின் போது தொடர்பு கொள்ள முடியாததாகவும் தெரிவித்தனர். இதனால் அலுவலகம் வெளியே பதற்றமான காட்சிகள் ஏற்பட்டன.

அருண்குமார் மற்றும் மாற்று வேட்பாளரின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டன. இதனால், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடியில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு செல்லுபடியாகும் வேட்பாளர் இல்லாமல் போனது.

இதற்கான காரணத்தை விளக்கிய தேர்தல் அதிகாரி பி. நடராஜன், “அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் வேட்பாளர்களுக்கு 10 பரிந்துரையாளர்கள் அவசியம். இங்கு த.வெ.க. வேட்பாளரிடம் 7 பரிந்துரையாளர்கள் மட்டுமே இருந்தன. இதனால் வேட்புமனு பரிந்துரை நிராகரிக்கப்பட்டது. மாற்று வேட்பாளரின் பரிந்துரையும் அதே காரணத்தால் நிராகரிக்கப்பட்டது.” என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் முதல் முறை வாக்காளர்கள் 34 சதவீதம் அதிகரிப்பு.. இவர்கள் ஆதரவு யாருக்கு?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com