விருதுநகர், பிப்.8, 2026: தென்தமிழ்நாட்டின் எஃகு மனிதர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என கனிமொழி எம்.பி புகழாரம் சூட்டியுள்ளார். தி.மு.க இளைஞரணி மாநாடு விருதுநகரில் சனிக்கிழமை (பிப்.7, 2026) நடைபெற்றது.
மு.க. ஸ்டாலின் பேச்சு
இந்த மாநாட்டில் பேசிய மு.க ஸ்டாலின், “எல்லா ரேங்குகளிலும் தமிழ்நாடுதான் டாப்; சூப்பர் ஸ்டார்; அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னேற்றம் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நாம் செய்தது போல சாதனைகளை 5 ஆண்டுகளில் செய்தது உண்டா?” எனக் கேள்வியெழுப்பினார்.
மேலும், “வேறு எந்த மாநிலத்திலும் இத்தனை திட்டங்கள், பயனாளிகள் இருக்க முடியாது என கெத்தாக சொல்லலாம்” எனக் கூறிய கனிமொழி எம்.பி., ‘அடிமைகளும், துரோகிகளும் எதிரிகளுடன் சேர்ந்துகொண்டு ஒட்டுமொத்த மாநிலத்தின் சுயமரியாதையை அடகு வைக்க முயற்சி செய்கிறார்கள் அதனால்தான் தமிழ்நாடு தலைகுனியாது என்று சொல்லக்கூடிய தெம்பும், திராணியும் கொண்டிருக்கக்கூடிய ஒரே இயக்கமாக திமுக இருக்கிறது” என்றார்.
என்.டி.ஏ பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சித்த கனிமொழி, “தமிழகத்துக்கு ஜீரோ சொன்னவர்களை எதிர்க்காமல் பாஜகவின் கிளைச் செயலராக மாறியிருக்கிறார் பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி இப்போது என்.டி.ஏ. பழனிசாமியாக மாறியிருக்கிறார்.
நானும் ரௌடிதான் என்று சொல்வதுபோல நான்தான் கூட்டணிக்கு தலைமை என புலம்புகிறார். 100 நாள் வேலைத் திட்ட சட்டத்தின் பெயரை படித்தாரா, அதைப் பற்றி பழனிசாமிக்கு தெரியுமா? எனவும் கேள்வியெழுப்பினார்.
மேலும், ஓனரை மிஞ்சிய லேபராக இருக்கிறார் பழனிசாமி; அவர்கள் கூட்டணியின் டிசைனைப் பாருங்கள். * பதவி கொடுத்தவரை கட்சியிலிருந்து நீக்கியவர் பழனிசாமி; போன தேர்தலில் பிரிந்தோர் இப்போது சேர்ந்துள்ளனர்.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் தமிழ்நாட்டுக்கும் மோதல்; இதில் தமிழ்நாட்டை நாம் ஜெயிக்க வைக்க வேண்டும்” என்றார்.
கனிமொழி பேச்சு
முன்னதாக பேசிய கனிமொழி, “துரோகத்தோடு கை கோத்துக் கொண்டு நமக்கு எதிராக ஒரு கூட்டணி உருவாகியிருக்கிறது. தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை நிறுத்தி வைத்துள்ள – துரோகத்தோடு கூட்டணி வைத்துள்ளனர்; தேர்தல் வருகிறது என்றாலும் தமிழ்நாட்டுக்கு அள்ளி அல்ல கிள்ளிகூட கொடுக்க மாட்டேன் என ஒரு கூட்டணி இருக்கிறது.
ட்ரம்ப் உடன் வர்த்தக ஒப்பந்த மாற்றத்தை கொண்டு வருவதாக பிரதமர் மோடி சொல்கிறார். ஆனால் நாம் அனுப்பக்கூடிய பொருட்களுக்கு அமெரிக்காவில் 18% வரி; அங்கிருந்து வரக்கூடிய பொருட்களுக்கு வரியே கிடையாது.
இது எதற்கும் பிரதமர் மோடி பதில் சொல்லமாட்டார். உழைப்பு, உழைப்பு… என்ற வார்த்தைக்கு உதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் மு.க ஸ்டாலின். பாசிச சக்திகளை எதிர்க்கக்கூடிய தலைவரும் நான்தான் என்ற உறுதியோடும் வாழ்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்” என்றார் கனிமொழி.
இதையும் படிங்க: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு. பிப்.12 தி.மு.க. ஆர்ப்பாட்டம்!
Meesaya Murukku 2 Review: ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கிய மீசைய முருக்கு 2 படம், கானா இசையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டாலும், அதன் கதை…
Esha Singh: ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026-இல் இந்தியாவின் இளம் துப்பாக்கி சுடும் வீராங்கனை ஈஷா சிங், பெண்கள் 25 மீட்டர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் வெள்ளிப்…
Panda Gangs: தினேஷின் புதிய படம் “பந்தா காங்க்ஸ்” என பெயரிடப்பட்டுள்ளது. இதன் முதல் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது….
Pope Leo: போப் லியோ ஐரோப்பிய நாடுகளை கிறிஸ்தவ வேர்களை மீண்டும் நினைவுகூர்ந்து, மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்….
Haritha Bhadra: இந்தியாவின் இளம் தடகள வீராங்கனை ஹரிதா பத்ரா, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 200 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார்….
Narendra Modi: விடுதலை வீரர் பகத்சிங் பிறந்தநாள் விழாவில் அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்….