மாஸ்கோ, பிப்.8, 2026: ரஷ்யாவில், பாஷ்கோர்டோஸ்தான் குடியரசின் உஃபாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் நான்கு இந்தியர்கள் உட்பட பலர் காயமடைந்தனர். துரதிர்ஷ்டவசமான இத்தாக்குதலில், நான்கு இந்திய மாணவர்கள் காயமடைந்ததாக ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், “ரஷ்ய அதிகாரிகளுடன் தூதரகம் தொடர்பில் உள்ளது. காயமடைந்த மாணவர்களுக்கு உதவி வழங்க கசானில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் உஃபாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ரஷ்ய பல்கலைக்கழக தாக்குதலில் காயமடைந்த நான்கு பேர் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக ரஷ்ய மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முதற்கட்ட தகவல்களின்படி, கத்தியுடன் ஆயுதம் ஏந்திய ஒரு டீனேஜர் உஃபாவில் உள்ள அரசு மருத்துவ பல்கலைக்கழக விடுதிக்குள் நுழைந்தார்.ஷ
இந்நிலையில் அங்கு கண்மூடித்தனமாக தாக்குதலில் ஈடுபட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தாக்குதல் நடத்திய 15 வயது இளைஞர் என அடையாளம் காணப்பட்டவர், உள்ளூர் குழந்தைகள் மருத்துவமனையிலும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், பாஷ்கோர்டோஸ்தான் குடியரசின் தலைநகரான உஃபாவில் உள்ள அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘நிபா வைரஸ் அரிதானது, அதேநேரம் ஆபத்தானது’.. உலக சுகாதார தலைவர்!
Pope Leo: போப் லியோ ஐரோப்பிய நாடுகளை கிறிஸ்தவ வேர்களை மீண்டும் நினைவுகூர்ந்து, மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்….
Haritha Bhadra: இந்தியாவின் இளம் தடகள வீராங்கனை ஹரிதா பத்ரா, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 200 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார்….
Narendra Modi: விடுதலை வீரர் பகத்சிங் பிறந்தநாள் விழாவில் அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்….
CM Vijay: மதுரையில் ‘தாய் மாமன் தங்க மோடிரம்’ திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்….
Aadhav Arjuna: மதுராந்தகம் இடைத்தேர்தல் தொடர்பாக உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதவ் அர்ஜுனா சவால் விடுத்துள்ளார்…
UPI Money Transaction: உச்சநீதிமன்றம் இன்று ரூ.2,000-ஐ மீறும் UPI பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டணத்தை தற்காலிகமாக நிறுத்த மறுத்துள்ளது….