சென்னையில் இருந்து மலேசியாவில் உள்ள பினாங்கு தீவிற்கு நேரடி விமான சேவையை இண்டியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னையில் இருந்து மலேசியாவில் உள்ள பினாங்கு தீவிற்கு நேரடி விமான சேவையை இண்டியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
Published on: November 19, 2024 at 5:09 pm
Chennai – Penang Direct Flight service | சென்னை மற்றும் மலேசியாவில் உள்ள பினாங்கு தீவிற்கு டிசம்பர் 21 முதல் நேரடி தினசரி விமான சேவையை இண்டிகோ ஏர்லைன்ஸ் துவங்க உள்ளது.
தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் பினாங்கிற்கு சிறந்த விமான இணைப்பைக் கோரி தமிழ் அமைப்புகள் பல வருடமாக கோரிக்கை வைத்து வந்த நிலையில் தற்போது இண்டிகோ ஏர்லைன்ஸ் மூலம் இயக்கப்படும் இந்தச் சேவை துவங்குகிறது.
நேரடி விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 2:15 மணிக்கு புறப்பட்டு பினாங்குக்கு அதிகாலை சென்றடையும். அதேபோல், திரும்பும் விமானம் பினாங்கில் இருந்து காலையில் புறப்பட்டு 10:35 மணிக்கு சென்னை வந்தடையும்.
சென்னையில் இருந்து பினாங்குக்கு நேரடி சேவையானது பயண நேரத்தை 7 மணிநேரத்தில் இருந்து 4.5 மணிநேரமாக குறைக்கும். கூடுதலாக, பெங்களூரு மற்றும் கோலாலம்பூர் இடையே அதே தேதியில் விமானங்களை மீண்டும் தொடங்க இண்டிகோ திட்டமிட்டுள்ளது.
பினாங்கிலிருந்து கோலாலம்பூர், சிங்கப்பூர், துபாய் மற்றும் ஹாங்காங் போன்ற பல சர்வதேச நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் இருந்து இதுவரை நேரடி விமான சேவை இல்லமல் இருந்தது.
மலேசியாவில் கோலாலம்பூர் மற்றும் லங்காவியுடன் இண்டிகோவின் மூன்றாவது நேரடி இடமாக பினாங்கு உள்ளது. இங்கு, புதிய விமான சேவை தொடங்கப்படுவதால் பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பை போன்ற நகரங்களில் இருந்து பயணிகள் சென்னை வழியாக பினாங்கிற்கு செல்ல முடியும்.
பிரபலமான சுற்றுலா தலமான பினாங்கில் காலனித்துவ கட்டிடக்கலை, வெப்பமண்டல மழைக்காடுகள் மற்றும் வெள்ளை மணல் கடற்கரைகள் போன்ற இயற்கை இடங்கள் மற்றும் சாலையோர உணவுகள் என சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற ஏராளமானவைகள் உள்ளன.
இதையும் படிங்க ஃபாக்ஸ்கான் விரிவாக்கம் ; 20000 புதிய வேலைவாய்ப்பு ; செக் பண்ணுங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com