TTV Dhinakaran : இன்றைய ஆளுநர் உரை “தங்க முலாம் பூசப்பட்ட தகரம்” போன்றது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
TTV Dhinakaran : இன்றைய ஆளுநர் உரை “தங்க முலாம் பூசப்பட்ட தகரம்” போன்றது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Published on: June 18, 2026 at 3:20 pm
சென்னை, ஜுன் 18 2026: தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை இடம்பெற்றதைத் தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, உரையில் வெளிப்படையாக கவர்ச்சிகரமான வார்த்தைகள் இடம்பெற்றிருந்தாலும், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கும் உறுதியான அம்சங்கள் எதுவும் இல்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
“இன்றைய உரை பொன்னால் பூசப்பட்ட தகரம்” எனக் குறிப்பிட்டுள்ளஅவர், உரை முழுவதும் ‘Cut, Copy, Paste’ முறையில் தயாரிக்கப்பட்டதாகவும், மக்களின் நலனுக்கான திட்டங்கள் காணாமல் போயுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
தமிழக மக்கள் எதிர்பார்த்த பல்வேறு முக்கிய அறிவிப்புகள் ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை என்றும், மாநிலத்தின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, விவசாயம், தொழில் முன்னேற்றம் உள்ளிட்ட துறைகளில் தெளிவான செயல்திட்டங்கள் எதுவும் கூறப்படவில்லை என்றும், வெறும் வாக்குறுதிகள் மற்றும் அரசின் சாதனைகளை பட்டியலிடுவதற்காகவே இந்த உரை பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
தங்க முலாம் பூசப்பட்ட தகரம் தான்
— TTV Dhinakaran (@TTVDhinakaran) June 18, 2026
தவெக அரசு தயாரித்த ஆளுநரின் இன்றைய உரை! pic.twitter.com/UQX6ikDnQD
மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு பற்றாக்குறை, விவசாயிகளின் கோரிக்கைகள், அடிப்படை வசதிகள் மேம்பாடு போன்ற பிரச்சினைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என கூறியுள்ளார். மாநிலத்தின் உண்மையான தேவைகளை பிரதிபலிக்கும் ஆவணமாக ஆளுநர் உரை அமைய வேண்டிய நிலையில், அது அரசின் விளம்பர உரையாக மாறிவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், தமிழகத்தின் பொருளாதார நிலைமை மற்றும் கடன் சுமை குறித்து மக்களுக்கு தெளிவான விளக்கங்கள் வழங்கப்படவில்லை என்றும், எதிர்கால வளர்ச்சிக்கான நம்பகமான திட்டங்கள் பற்றிய குறிப்புகளும் இல்லையென அவர் தெரிவித்துள்ளார். மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை நேரடியாக எடுத்துரைக்கும் வகையில் உரை அமைந்திருக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்
அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை புகழ்ந்து பேசுவதற்குப் பதிலாக, மக்கள் நலன் சார்ந்த புதிய திட்டங்கள் மற்றும் அவற்றை செயல்படுத்தும் காலக்கெடுகள் குறித்து விளக்கப்பட்டிருக்க வேண்டும். சட்டப்பேரவையில் ஆளுநர் உரை என்பது அரசின் கொள்கை நோக்கங்களை வெளிப்படுத்தும் முக்கிய ஆவணமாகும்; ஆனால் இந்த உரை அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.
எனவே, ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ள அம்சங்களை மட்டும் நம்பி மக்கள் ஏமாறக் கூடாது என்றும், நடைமுறையில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளே அரசின் உண்மையான செயல்திறனை வெளிப்படுத்தும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் எத்தனை நாட்கள்? சபாநாயகர் விளக்கம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com