Tamil Nadu Assembly Session : தமிழக வளர்ச்சி திட்டங்கள் கவர்னர் உரையில் இடம்பெறவில்லை என திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Tamil Nadu Assembly Session : தமிழக வளர்ச்சி திட்டங்கள் கவர்னர் உரையில் இடம்பெறவில்லை என திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Published on: June 18, 2026 at 2:57 pm
சென்னை, ஜுன் 18 2026: தமிழக சட்டப்பேரவை இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில், முதல்நாள் கூட்டத்தொடருக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய திட்டங்கள் மற்றும் மக்கள் நல அறிவிப்புகள் ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை விமர்சித்துள்ளார்.
மாநிலத்தின் எதிர்கால முன்னேற்றம் தொடர்பான பல்வேறு அம்சங்கள் உரையில் பிரதிபலிக்காதது ஏமாற்றமளிப்பதாக உள்ளது. ஆளுங்கட்சியினர் ரீல்ஸ் போடுவதற்கான கண்டெண்ட் மெட்டீரியலாக கவர்னர் உரை அமைந்துள்ளது. முரண்பாடுகளின் மொத்த உருவமாக கவர்னர் உரை உள்ளது.
திமுக ஆட்சியில் அரசின் எந்த உரையையும் கவர்னர் முழுவதுமாக படித்ததே இல்லை. பல திருத்தங்களை செய்வார். இன்று தவெக அரசு தயாரித்த உரையை, ஒரு வரி கூட மாற்றாமல் படித்துள்ளார். இதிலிருந்தே தவெக – பாஜக இடையே இணக்கமான சூழல் உள்ளதோ என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு எந்தவொரு திட்டங்களும் கவர்னர் உரையில் இல்லை என்று தெரிவித்தார். இந்த அரசு அமைந்து ஒரு மாதம்தான் ஆகிறது என்று குறிப்பிட்ட உதயநிதி இவர்களிடம் சொல்ல சாதனைகளே இல்லை. இவர்கள் சொல்வது, அறிவிப்பது எல்லாமே திராவிட மாடல் அரசின் திட்டங்கள். திமுக அரசின் திட்டங்கள், சாதனைகள், கோரிக்கைகளே கவர்னர் உரையில் உள்ளது. உள்ளது. திமுக அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டிவிட்டு, ஆட்சியின் தோல்விக்கான பழியையும் திமுக அரசின் மீது போட்டுள்ளனர். முந்தைய அரசின் திட்டங்களை முடக்கினால் சும்மா இருக்க மாட்டோம் என்று கூறினார.
இதையும் படிங்க : தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் எத்தனை நாட்கள்? சபாநாயகர் விளக்கம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com