தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் எத்தனை நாட்கள்? சபாநாயகர் விளக்கம்

Tamil Nadu Assembly Session : தமிழக சட்டசபை கூட்டம் மூன்று நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துள்ளார்.

Published on: June 18, 2026 at 1:25 pm

சென்னை, ஜுன் 18 2026: முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு முதல் சட்டசபை கூட்டம் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தனது உரையை ஆங்கிலத்தில் பேசினார். ஆளுநர் உரையை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தமிழில் வாசித்தார். இத்துடன் இன்றைய சட்டப்பேரவைக் கூட்டம் முடிவடைந்தது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், குளிர்கால கூட்டத்தொடர் மொத்தம் 3 நாட்கள் நடைபெறும் என்று தெரிவித்தார்.

நாளை (19-ந் தேதி) முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். சனி, ஞாயிறு விடுமுறையைத் தொடர்ந்து, “வரும் 22-ந் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கும். 23-ந் தேதி பதில் உரை இடம்பெறும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க Tamil News Updates June 18 2026: இருமொழிக் கொள்கை பின்பற்றப்படும்.. ஆளுநர் அர்லேகர்

மக்கள் சேவைக்கு புதிய முகவரி! பெரம்பூரில் எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் விஜய் Perambur MLA Office

மக்கள் சேவைக்கு புதிய முகவரி! பெரம்பூரில் எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் விஜய்

சொத்துக் குவிப்பு வழக்கு.. நேரில் ஆஜராவதில் இருந்து எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்துக்கு விலக்கு! MRK Panneerselvam

சொத்துக் குவிப்பு வழக்கு.. நேரில் ஆஜராவதில் இருந்து எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்துக்கு விலக்கு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com