விண்வெளியில் மட்டுமல்ல… சந்தை மதிப்பிலும் பறக்கும் ஸ்பேஸ்X.. அமேசானை பின்னுக்குத் தள்ளி சாதனை

SpaceX Tops Amazon: ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், அமேசானை பின்னுக்குத் தள்ளி உலகின் 5-வது மிகப்பெரிய நிறுவனமாக புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

Published on: June 18, 2026 at 3:45 pm

புதுடெல்லி, ஜுன் 18 2026: சமீபத்தில் பங்குச்சந்தையில் நுழைந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அதிவேக வளர்ச்சியைக் கண்டுள்ளது. எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

சந்தை மதிப்பின் அடிப்படையில், ஜெஃப் பெசோஸ் நிறுவிய அமேசான் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி, உலகின் 5-வது மிகப்பெரிய நிறுவனமாக ஸ்பேஸ் எக்ஸ் உருவெடுத்துள்ளது. சமீபத்திய பங்குச் சந்தை வர்த்தகத்தில் நிறுவனத்தின் பங்கு விலை கணிசமாக உயர்ந்ததன் மூலம், அதன் மொத்த சந்தை மதிப்பு சுமார் 2.65 டிரில்லியன் டாலரை கடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 7,500 கோடி டாலர் மதிப்பீட்டுடன், 2.15 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டியுள்ள ஸ்பேஸ் எக்ஸ், தொழில்நுட்ப துறையில் வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், விண்வெளி ஆராய்ச்சி மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது. ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை, உலகளாவிய அளவில் விரிவடைந்து, நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது. இதன் மூலம், அமேசான், டெஸ்லா, எக்ஸ்சன் மோபில் போன்ற நிறுவனங்களை முந்தி, உலகின் 5வது பெரிய நிறுவனமாக உயர்ந்துள்ளது. உலகளாவிய தொழில்நுட்ப துறையில், 135 அமெரிக்க டிரில்லியன் டாலர் மதிப்பீட்டுடன், ஸ்பேஸ் எக்ஸ் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது.

சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனமான ‘கர்சர்’ (Cursor)-ஐ சுமார் 60 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்கு பரிமாற்ற ஒப்பந்தத்தின் மூலம் வாங்குவதற்கான நடவடிக்கையையும் ஸ்பேஸ் எக்ஸ் மேற்கொண்டுள்ளது.

ஆப்பிள், என்விடியா, மைக்ரோசாஃப்ட் மற்றும் ஆல்பபெட் (கூகுள்) ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக தற்போது ஸ்பேஸ்X இடம்பிடித்துள்ளது. சில வர்த்தக அமர்வுகளில் மைக்ரோசாஃப்டின் சந்தை மதிப்பையும் தற்காலிகமாக நெருங்கியதாக சந்தை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் போட்டியிடும் நிலைக்கு ஸ்பேஸ் எக்ஸ் மிக வேகமாக முன்னேறி வருவது முதலீட்டாளர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த சாதனை எலான் மஸ்க்கின் தனிப்பட்ட சொத்து மதிப்பையும் மேலும் உயர்த்தியுள்ளது. டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களில் அவருக்குள்ள பங்குகளே அவரது செல்வத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளன. விண்வெளி ஆய்வு, செவ்வாய் கிரக குடியேற்றம், செயற்கை நுண்ணறிவு மற்றும் உலகளாவிய இணைய சேவை உள்ளிட்ட துறைகளில் நீண்டகால இலக்குகளை நோக்கி ஸ்பேஸ் எக்ஸ் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

குறுகிய காலத்தில் அபாரமான வளர்ச்சியை பதிவு செய்து, உலகின் மிகப்பெரிய நிறுவனங்களின் வரிசையில் இடம்பிடித்திருப்பது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் வரலாற்றுச் சாதனையாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க ஆர்.பி.எல் வங்கியின் புதிய தலைமை நிதி அதிகாரி.. யார் இந்த பவின் லக்பட்வாலா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com