Fire breaks out in Egmore railway station: சென்னை எழும்பூர் ரயில் நிலைய அலுவலர்கள் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
Fire breaks out in Egmore railway station: சென்னை எழும்பூர் ரயில் நிலைய அலுவலர்கள் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
Published on: March 27, 2025 at 8:21 pm
Updated on: March 27, 2025 at 8:22 pm
சென்னை மார்ச் 27 2025: சென்னை எழும்பூர் ரயில் நிலைய அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவிலேயே மிகவும் பரபரப்பாக இயங்கும் ரயில் நிலையங்களில் சென்னை எழும்பூரும் ஒன்றாகும்.
இந்த நிலையில் அங்குள்ள நிலைய அலுவலர்கள் அறையில் திடீரென தீ விபத்து இன்று ( மார்ச் 27 2025)ஏற்பட்டது. இந்த தீ விபத்தானது சில கனநேர துளிகளில் வேகமாக பரவியது. மேலும் தீ விபத்து காரணமாக கரும் புகையும் ஏற்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்தத் தகவலைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்தனர்.
தொடர்ந்து அவர்கள் தண்ணீரை பீச்சி அடித்து, பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : தூத்துக்குடி விஜய் கட்சி பொறுப்பாளர் மீது வன்கொடுமை வழக்கு.. நடந்தது என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com