Assault case: தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Assault case: தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Published on: March 27, 2025 at 7:48 pm
Updated on: March 27, 2025 at 7:55 pm
தூத்துக்குடி மார்ச் 27 2025: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளராக வி.ஜி சரவணன் என்பவர் இருந்து வருகிறார். இவர் மீது போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நடந்தது என்ன?
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் பாலமுருகன். மாற்றுத்திறனாளியான வழக்கறிஞர் பாலமுருகனை, தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் உரிய புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரின் அடிப்படையில், தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் வி.ஜி சரவணன் உட்பட ஏழு பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும்; பொது இடங்களில் ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றி கழகம் மாநாடு பணிகளில் தற்போது கவனம் செலுத்தி வருகிறது. கட்சியை அமைப்பு ரீதியாக பலப்படுத்தி அடுத்த கட்டமாக நடிகர் விஜய் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணத்தில் ஈடுபட உள்ளார் எனவும் கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக்கழகம் 2026 சட்டப்பேரவை தேர்தலில், போட்டியிட தீவிர கவரும் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் சில கட்சிகள் தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி அமைக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல்.. 6 பிரிவுகளின் கீழ் வழக்கு: 2 பெண்கள் உட்பட பேர் கைது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com