சமூக வலைதளங்களில் ம.தி.மு.க மீது தி.மு.க பழி தூற்றுகிறது.. வைகோ

Vaiko: சமூக வலைதளங்களில் ம.தி.மு.க மீது தி.மு.க பழி தூற்றுகிறது என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Published on: June 14, 2026 at 4:41 pm

சாத்தூர், ஜூன் 14, 2026: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலையில் சீமைக்கருவேலை மரங்களை அகற்றும் பணியைத் தொடங்கி வைத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, செய்தியாளர்களிடம் பல்வேறு கருத்துகளை வெளியிட்டார்.

மேகதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு கேடு விளைவிப்பது கர்நாடக அரசு அல்ல, மத்திய அரசே என அவர் குற்றம்சாட்டினார். 2014-ஆம் ஆண்டு கர்நாடக மாநிலக் கட்சிகள் அனைத்தும் அப்போதைய மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் வீட்டில் கூடுகையில், தஞ்சை மாவட்டத்தில் பஞ்சம் ஏற்படும் எனக் கூறி, அப்போதே மேகதாட்டு அணைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் வைகோ நினைவூட்டினார்.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் காலங்காலமாக எல்லா ஆட்சிகளிலும் நடந்துவருகின்றன. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும்படி சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என வைகோ வலியுறுத்தினார்.

கூட்டணி குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், பொதுக்குழுவை கூட்டி ஆலோசிக்க வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். திமுகவினரை வெற்றிபெறச் செய்வதில் மதிமுக மிகுந்த விசுவாசத்துடன் செயல்பட்டதாகவும், கூட்டணியில் உள்ள மற்றவர்கள் தங்கள் முடிவுகளை எடுத்துள்ளதாகவும் வைகோ கூறினார்.

சமூக வலைத்தளங்களில் திமுகவினர் காரணமில்லாமல் மதிமுக மீது பழிதூற்றுவதாகவும், அதைப் பற்றி கவலைப்படவில்லை என்றும் வைகோ தெரிவித்தார். வரும் ஜூன் 27-ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் மதிமுக தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க செல்வபெருந்தகை மகள் திருமணத்துக்கு பின் காங்கிரஸ் தலைவர் மாற்றம்? பரபரப்பு தகவல்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com