Tamil Nadu fishermen arrested: இந்திய இலங்கை சர்வதேச கடலையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 11 பேர் இன்று ( மார்ச் 27 2025) கைது செய்யப்பட்டனர்.
Tamil Nadu fishermen arrested: இந்திய இலங்கை சர்வதேச கடலையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 11 பேர் இன்று ( மார்ச் 27 2025) கைது செய்யப்பட்டனர்.
Published on: March 27, 2025 at 5:02 pm
Updated on: March 27, 2025 at 8:08 pm
ராமேஸ்வரம் மார்ச் 27 2025: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன் மற்றும் தங்கச்சிமடம் ஆகிய இடங்களைச் சேர்ந்த 11 மீனவர்கள், வியாழக்கிழமை (மார்ச் 27, 2025) அதிகாலை சர்வதேச கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த மீனவர்கள் வியாழக்கிழமை அதிகாலையில், பாக் விரிகுடா பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, , இலங்கை கடற்படையின் கண்காணிப்புக் குழு 11 மீனவர்களை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து இழுவைப் படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதற்கிடையில், ராமேஸ்வரம் படகுத் துறையிலிருந்து புதன்கிழமை (மார்ச் 26, 2025) 454 டோக்கன்களை வழங்கியதாக மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், மத்திய அரசு இலங்கையிடம் பேச்சு வார்த்தை நடத்தி இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண மீனவர் சங்கத் தலைவரான ஜேசு ராஜா வலியுறுத்தினார். மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட இழுவைப் படகுகள் உடனடியா விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்த நிலையில், மீனவர்களைச் சந்திக்கும் வகையில், இலங்கைக்கு மீனவர் குழுவை அனுப்ப தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இவர்கள் ஏப்ரல் 1 ஆம் தேதி திரும்பி வர வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :17 வயது சிறுமிக்கு காதல் தொல்லை.. மண்ணெண்ணெய் ஊற்றி எரிப்பு.. எட்டயபுரத்தில் பயங்கரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com