Thoothukudi: காதலை ஏற்க மறுத்த 17 வயது சிறுமியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த வழக்கில் இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தீக்காயத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Thoothukudi: காதலை ஏற்க மறுத்த 17 வயது சிறுமியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த வழக்கில் இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தீக்காயத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Published on: March 27, 2025 at 3:19 pm
Updated on: March 27, 2025 at 4:02 pm
தூத்துக்குடி மார்ச் 27, 2025: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கீழநம்பிபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தனது தாயுடன் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி திருவள்ளுவர் நகரில் வசித்து வந்தார். இதே பகுதியைச் சேர்ந்த குமாரவேல் என்பவரின் மகன் 20 வயதான சந்தோஷ் 17 வயதான சிறுமிக்கு காதல் தொல்லை அளித்து வந்துள்ளார். இந்த விஷயம் சிறுமியின் தாயாருக்கு தெரிய வந்துள்ளது.
இதையடுத்து சிறுமியின் தாயார் இது தொடர்பாக பரமக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சந்தோஷை எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்த நிலையில், சிறுமியின் எதிர்கால வாழ்க்கையை கருதி எட்டயபுரம் அருகே உள்ள பாட்டி வீட்டுக்கு சிறுமியை அவரது தாயார் அனுப்பி வைத்து விட்டார்.
உயிருடன் தீவைப்பு
இந்த நிலையில், 2025 மார்ச் 23ஆம் தேதி சிறுமியை தேடி சந்தோஷ் தனது நண்பர் 22 வயதான முத்தையா என்பவருடன் சென்றுள்ளார். அங்கு சிறுமியிடம் மீண்டும் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார்.
இதற்கு சிறுமி மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரத்தில் அங்கிருந்த மண்ணெண்ணையை எடுத்து சிறுமியின் மீது ஊற்றி தீ வைத்து அங்கிருந்து ஓடி விட்டார் என கூறப்படுகிறது.
இதற்கிடையில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்து அவரைக் காப்பாற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது சிறுமிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமியின் உடலில் தீக்காயங்கள் உள்ளன.
சிறையில் அடைப்பு
வீட்டிலிருந்த சிறுமி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையில் எட்டயபுரம் போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றனர். அப்போது சிறுமி, ” சந்தோஷ் காதலை வற்புறுத்தியதாகவும் நான் ஏற்க மறுத்த நிலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாகவும்” தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் முத்தையா ஆகியோரை கைது செய்து கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 3 மாதங்களில் ரூ.8000 கோடி முதலீட்டை இழந்த தமிழ்நாடு: மருத்துவர் ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com