Dr Ramadoss: மூன்று மாதங்களில் ரூ.8000 கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது என விமர்சித்துள்ள மருத்துவர் ராமதாஸ், விளம்பர அரசியலை விடுத்து தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
Dr Ramadoss: மூன்று மாதங்களில் ரூ.8000 கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது என விமர்சித்துள்ள மருத்துவர் ராமதாஸ், விளம்பர அரசியலை விடுத்து தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
Published on: March 26, 2025 at 7:59 pm
தமிழ்நாடு அரசு விளம்பர அரசியலை விடுத்து தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ரூ.8000 கோடி அளவுக்கு முதலீடு செய்ய திட்டமிட்டிருந்த இரு வெளிநாட்டு நிறுவனங்கள், தமிழகத்தில் சாதகமான சூழல் இல்லை என்று கூறி, ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டியில் முதலீடு செய்ய முடிவு செய்திருக்கின்றன எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு முதலீடுகளை ஈர்க்கும் திறன் தமிழ்நாட்டுக்கு குறைந்து வருகிறது என்பது தான் உண்மை. மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் கடந்த முறை மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்நாடு, இம்முறை பட்டியலில் இருந்தே நீக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இந்தி இங்குதான் திணிக்கப்படுகிறது.. அண்ணாமலை ஷார்ப் அட்டாக்!
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள 30 வகையான சீர்திருத்தங்களில் பெரும்பான்மையானவற்றை தமிழக அரசு செய்யவில்லை என்பது தான் இதற்குக் காரணம் ஆகும்.
ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் முதலீடுகள் குவிவதைப் போன்றத் தோற்றத்தை ஏற்படுத்த திமுக அரசு முயன்று வருகிறது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடிக்கும் கூடுதலான முதலீடுகள் வந்திருப்பதாக தமிழக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், அதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பா.ம.க. பலமுறை வலியுறுத்தியும் அதை செய்ய திராவிட மாடல் அரசு மறுக்கிறது.
எனவே, பயனற்ற செய்வதை விடுத்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழலை ஏற்படுத்தி, வெளிநாடுகளில் இருந்தும், உள்நாட்டில் இருந்து அதிக அளவில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டுக்கு வந்துள்ள தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை; பேச அனுமதி மறுப்பு: சபாநாயகர் மீது ராகுல் பரபரப்பு குற்றச்சாட்டு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com