Rahul Gandhi: நாடாளுமன்ற மக்களவைியில் பேச அனுமதி மறுக்கப்படுவதாக ராகுல் காந்தி சபாநாயகர் மீது குற்றஞ்சாட்டினார்.
Rahul Gandhi: நாடாளுமன்ற மக்களவைியில் பேச அனுமதி மறுக்கப்படுவதாக ராகுல் காந்தி சபாநாயகர் மீது குற்றஞ்சாட்டினார்.
Published on: March 26, 2025 at 5:09 pm
Updated on: March 26, 2025 at 6:23 pm
புதுடெல்லி, மார்ச் 26 2025: மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி புதன்கிழமை (மார்ச் 26, 2025)எதிர்க்கட்சிகளின் குரலை அரசாங்கம் நசுக்குவதாகக் குற்றஞ்சாட்டினார்.
அப்போது, கடந்த பல நாட்களாக அவர் சபையில் பேச அனுமதிக்கப்படவில்லை என்று கூறினார். நாடாளுமன்றத்தில் தொடர்ந்து இடையூறுகள் மற்றும் பரபரபான வாதங்களுக்கு மத்தியில் ராகுல் காந்தியிடம் இருந்து இந்தக் கருத்துகள் வந்துள்ளன.
இது குறித்து பேசிய ராகுல் காந்தி, என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. நான் அவரை (சபாநாயகரை) பேச அனுமதிக்குமாறு பல முறை கேட்டுக் கொண்டுள்ளேன். ஆனால் அவர் அனுமதிக்கவில்லை. இது சபையை நடத்துவதற்கான வழி அல்ல. சபாநாயகர் அவையில் இருந்து வெளியேறியுள்ளார். அவர் என்னைப் பேச விடவில்லை. மேலும், அவர் என்னைப் பற்றி ஆதாரமற்ற செய்தி ஒன்றைச் சொன்னார். தொடர்ந்து, அவர் சபையை தேவை இல்லாமல் ஒத்திவைத்தார் என்றார்.
#WATCH | Delhi: Lok Sabha LoP and Congress leader Rahul Gandhi says, " I don't know what is going on…I requested him to let me speak but he (Speaker) just ran away. This is no way to run the House. Speaker just left and he did not let me speak…he said something… pic.twitter.com/5cszadgc3w
— ANI (@ANI) March 26, 2025
மேலும் ராகுல் காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் பேச அனுமதி அளிக்க வேண்டும். இருப்பினும், நான் பேச நிற்கும் போதெல்லாம் எனக்கு அனுமதி இல்லை. சபை எவ்வாறு செயல்படுகிறது என்று எனக்குத் தெரியவில்லை. நாங்கள் விரும்புவதைச் சொல்ல எங்களுக்கு அனுமதி இல்லை என்றார்.
இதற்கிடையில், ஜனநாயகத்தின் முழு உணர்வும் சமரசம் செய்யப்படுகிறது. நான் அமைதியாக அமர்ந்திருக்கிறேன். ஆனால் எனக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றார்.
இதையும் படிங்க : ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடிமகன் சர்ச்சை? மத்திய அரசு 4 வாரத்தில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com