5 Special FD Schemes: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் பஞ்சாப் சிந்து வங்கிகளின் சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மார்ச் 31 2025 ஆம் ஆண்டு நிறைவு பெறுகின்றன
5 Special FD Schemes: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் பஞ்சாப் சிந்து வங்கிகளின் சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மார்ச் 31 2025 ஆம் ஆண்டு நிறைவு பெறுகின்றன
Published on: March 26, 2025 at 9:45 pm
இந்திய முதலீட்டாளர்கள் பெரும்பாலும் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். மற்ற முதலீட்டு கருவிகளுடன் ஒப்பிடும்போது பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு நிலையான வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன. மேலும் அவ்வப்போது சில வங்கிகள் சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்களையும் அறிமுகப்படுத்துகின்றன.
இந்த நிலையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஐடிபிஐ வங்கி இந்தியன் வங்கி ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் பஞ்சாப் சிந்து வங்கி அறிமுகப்படுத்தியுள்ள சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மார்ச் 31 2025 ஆம் ஆண்டு நிறைவு பெறுகின்றன.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பிக்சட் டெபாசிட்
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அம்ரித் விருஷ்டி என்ற 444 நாட்கள் சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தத் திட்டத்தில் பொது குடிமக்களுக்கு ஏழு புள்ளி 25 சதவீத வட்டியும் மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவீத வட்டியும் வழங்கப்படும்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் மற்றொரு சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டமான அம்ரித் கலாஸ் 400 நாட்கள் கால அளவைக் கொண்டது. இதில் பொது குடிமக்களுக்கு 7 புள்ளி 10 சதவீத வட்டியும் மூத்த குடிமக்களுக்கு 7.60% வட்டியும் வழங்கப்படுகிறது.
ஐ டி பி ஐ வங்கி உச்சவ் (Utsav) பிக்சட் டெபாசிட்
ஐடிபிஐ வங்கியின் இந்த சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டத்தில், முதிர்ச்சி காலத்தைப் பொறுத்து பல்வேறு விதமான வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன.
இந்தியன் வங்கி சிறப்பு சக்ச டெபாசிட்
இந்தியன் வங்கி சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 300 நாட்கள் கால அளவு கொண்ட டெபாசிட்டுக்கு 8.05% வரை மிகமூத்த குடிமக்களுக்கு வழங்கப்படுகிறது.
அதேபோல் நானூறு நாட்கள் சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கும் இதே அளவிலான அதிகபட்ச வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
ஹெச்டிஎஃப்சி வங்கி ஸ்பெஷல் டெபாசிட்
ஹெச்டிஎப்சி வங்கி சிறப்பு பிக்சர் டெபாசிட் திட்டத்தில் சாதாரண குடி மக்களுக்கு 7.35 சதவீத வட்டியும் மூத்த குடிமக்களுக்கு 7.85% வட்டியும் வழங்குகிறது.
பஞ்சாப் சிந்து வங்கி
பஞ்சாப் சிந்து வங்கியில் 333 நாட்கள் சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டமும் 444 சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டமும் உள்ளது. இதில் 333 நாட்கள் சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 7.20% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
தொடர்ந்து 555 நாட்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு 7.45 சதவீதம் வட்டியும்; 777 நாட்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு 7.20% வட்டியும்; 999 நாட்கள் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 6.65 சதவீத வட்டியும் வழங்குகிறது. 444 நாட்களைப் பொறுத்தவரை 7.30 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீத வட்டி அதிகமாக வழங்கப்படும்.
இதையும் படிங்க: சீனியர் சிட்டிசன்கள் ஃபிக்ஸட் டெபாசிட்: 2025 மார்ச்சில் எந்த ஸ்மால் வங்கியில் பெஸ்ட் ரிட்டன்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com