Vegetarian Crocodile At Kerala Temple: கேரளாவில் உள்ள கோவில் ஒன்றின் தெப்பக் குளத்தில் மீண்டும் சைவ முதலை தென்பட்டுள்ளது. இது பக்தர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Vegetarian Crocodile At Kerala Temple: கேரளாவில் உள்ள கோவில் ஒன்றின் தெப்பக் குளத்தில் மீண்டும் சைவ முதலை தென்பட்டுள்ளது. இது பக்தர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Published on: March 26, 2025 at 9:56 pm
கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள ஸ்ரீ அனந்தபத்மநாப சுவாமி கோவில் தெப்பக் குளத்தில் முதலை ஒன்று பல தசாப்தங்களாக வசித்து வந்தது. பாபியா, என்று அன்பாக அழைக்கப்பட்ட இந்த முதலை சைவ பிராணியாக காணப்பட்டது. இந்த முதலைக்கு கோவில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
மேலும், இது எந்தவொரு பக்தரையும் பயமுறுத்தவோ தொந்தரவு செய்யவோ இல்லை. மிகவும் அமைதியாக காணப்பட்டது. தினமும் இரண்டு முறை பிரசாதமாக வழங்கப்பட்ட அரிசி மற்றும் வெல்லத்தை மட்டுமே சாப்பிட்டது. இறுதியில், அக்டோபர் 2022 இல், பாபியா காலமானது.
இந்த பாபியா முதலைக்கு ஒரு நாட்டுப்புற கதை உள்ளது. அதாவது, 1945 ஆம் ஆண்டு ஒரு பிரிட்டிஷ் சிப்பாய் கோயில் குளத்தில் ஒரு முதலையைச் சுட்டுக் கொன்றார்.
சில நாள்களுக்கு பின்னர், பாபியா முதலை தென்பட்டது. இந்த முதலை கோவிலில் சர்வசாதாரணமாக வலம் வந்தது. சில நேரங்களில் கோவிலில் படிக்கட்டுகளில் கூட முதலை காணப்பட்டது.
இந்த முதலை கிட்டத்தட்ட 75 ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்தது.இந்த நிலையில் மீண்டும் ஒரு முதலை தென்பட்டுள்ளது என பக்தர்கள் கூறுகின்றனர்.
இந்த முதலையை கோவில் அருகில் சிலர் கண்டதாகவும் கூறுகின்றனர். இதற்கிடையில் கோவில் தரப்பில் வெளியான அறிக்கையில், ஒரு முதலை இறக்கும் போது, மற்றொரு முதலை தவிர்க்க முடியாமல் ஏரியில் தோன்றும், இது இன்னும் விவரிக்கப்படாத நிகழ்வாகவே உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 2125ல் ஏலியன்கள் இந்த நாட்டுக்கு வருவார்கள்: பாபா வங்கா கணிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com