RMC Chennai: தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை 100 டிகிரிக்கு அதிகமாக காணப்படும் என்ன சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
RMC Chennai: தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை 100 டிகிரிக்கு அதிகமாக காணப்படும் என்ன சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Published on: March 27, 2025 at 2:55 pm
சென்னை மார்ச் 27 2025: தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. இதற்கிடையில் தென் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்தது. இதனால் வெப்பநிலை ஓரளவு கட்டுக்குள் இருந்தது. இந்த நிலையில் இன்று (மார்ச் 27 2025) முதல் தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் எடுத்துள்ள வெயில் எச்சரிக்கையில், ” தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மார்ச் 27ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு வெப்பநிலை கடுமையாக உயரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு முன்னரே பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மதுரை வேலூரு ஈரோடு மற்றும் கரூர் உள்ளிட்ட பகுதிகளில் 100 டிகிரி தாண்டி வெயிலின் வெப்பநிலை பதிவானது.
இதில் அதிகபட்சமாக வேலூரில் 101.48 டிகிரி வெயில் பதிவானது. இந்த நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வறண்ட வானிலை நிலவரம் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் கூற்றின்படி தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் வேலூர் திருச்சி மதுரை, கரூர், சேலம், விருதுநகர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் திருநெல்வேலி சிவகங்கை திருவாரூர் புதுக்கோட்டை நாமக்கல் தஞ்சாவூர் பெரம்பலூர் விழுப்புரம் திருவண்ணாமலை அரியலூர் ராணிப்பேட்டை திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ராமநவமி தினத்தில் வழிபாடு: ராம்நாடு வருகிறார் மோடி.. ஏப்.6 பாம்பன் பாலம் திறப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com