Pamban Bridge In Rameswaram: பிரதமர் நரேந்திர மோடி 2025 ஏப்.6ஆம் தேதி ராமேஸ்வரம் வருகிறார். அவர் பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார்.
Pamban Bridge In Rameswaram: பிரதமர் நரேந்திர மோடி 2025 ஏப்.6ஆம் தேதி ராமேஸ்வரம் வருகிறார். அவர் பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார்.
Published on: March 26, 2025 at 11:17 pm
Updated on: March 26, 2025 at 11:40 pm
புதுடெல்லி, மார்ச் 26, 2025: ராமேஸ்வரம் தீவை பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கும் இந்தியாவின் முதல் செங்குத்து லிப்ட் கடல் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். ராம நவமியை முன்னிட்டு ஏப்ரல் 6 ஆம் தேதி இந்த பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். முன்னதாக, ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி பிரார்த்தனை செய்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
New Pamban Bridge: getting closer to commissioning!
— Ministry of Railways (@RailMinIndia) November 8, 2024
A successful OMS-engine run showcased the precision and strength of the Bridge, reaching speeds of 121 kmph on the Mandapam-Rameswaram section in Tamil Nadu and 80 kmph on the bridge itself. pic.twitter.com/lDHpi8Rpmc
இதைத் தொடர்ந்து ரயில்வே அமைச்சகம் நவீன பொறியியல் என்று வர்ணிக்கப்படும் புதிய பாம்பன் பாலத்தின் திறப்பு விழாவும் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பாம்பன் பாலத்தை திறந்து வைக்க உள்ளார்.
2.1 கிமீ நீளமுள்ள இந்தப் பாலம், இந்தியாவின் முதல் செங்குத்து லிப்ட் ரயில்வே கடல் பாலமாகும். இதன் செங்குத்து லிப்ட் இடைவெளி 72 மீ ஆகும்.
Raising the Bar of Connectivity!
— Ministry of Railways (@RailMinIndia) August 5, 2024
The Lift Span of the New Pamban Bridge has been launched successfully. A modern engineering marvel, it will enhance Rail connectivity to Rameswaram island and allow larger boats to pass underneath.#RailInfra4TamilNadu pic.twitter.com/oOWMiS71sx
மேலும், இது 104 ஆண்டுகள் பழமையான பாம்பன் பாலத்தின் கான்டிலீவர் அமைப்பை விட குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும் எனவும் கூறப்படுகிறது. புதிய பாலத்திற்கு பிரதமர் 2019 மார்ச் மாதம் அடிக்கல் நாட்டினார், அதைத் தொடர்ந்து அதன் கட்டுமானம் அடுத்த ஆண்டு தொடங்கியது.
இந்தப் பாலம் ரூ.580 கோடியில் கட்டப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் செப்டம்பர் 2024 இல் நிறைவடைந்தன. சோதனை ஓட்டங்கள் நவம்பர் 2024 இல் நடத்தப்பட்டன என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : 3 மாதங்களில் ரூ.8000 கோடி முதலீட்டை இழந்த தமிழ்நாடு: மருத்துவர் ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com