Telugu New Year: ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகாவில் உகாதி திருநாள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். மேலும், உலகெங்கிலும் வாழும் தெலுங்கு மக்களும் இதனை கொண்டாடுவார்கள்.
Telugu New Year: ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகாவில் உகாதி திருநாள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். மேலும், உலகெங்கிலும் வாழும் தெலுங்கு மக்களும் இதனை கொண்டாடுவார்கள்.
Published on: March 26, 2025 at 11:01 pm
Telugu New Year Ugadi 2025: தெலுங்கு புத்தாண்டு தினமாக உகாதி பண்டிகை கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். இதே தினத்தில் குடி பத்வா எனப்படும் மராத்தி புத்தாண்டு தினமும் கொண்டாடப்படும்.
உகாதி சிறப்புகள்
சந்திர, சூரிய நாட்காட்டி சந்திரன் மற்றும் சூரியனின் நிலையைக் கருத்தில் கொண்டு இறுதியில் ஆண்டை மாதம் மற்றும் நாட்களாகப் பிரிக்கிறது. அந்த வகையில், சந்திர-சூரிய நாட்காட்டியின் எதிர்மாறான சூரிய நாட்காட்டி, சூரியனின் நிலையை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு ஆண்டை மாதங்கள் மற்றும் நாட்களாகப் பிரிக்கிறது.
இந்த நிலையில், சூரிய நாட்காட்டியின் அடிப்படையில் இந்து புத்தாண்டு தமிழ்நாட்டில் புத்தண்டு என்று அழைக்கப்படுகிறது. தொடர்ந்து, அஸ்ஸாமில் பிஹு என்றும், பஞ்சாபில் வைசாகி என்றும், ஒரிசாவில் பாண சங்கராந்தி என்றும், மேற்கு வங்காளத்தில் நப பர்ஷா என்றும் அழைக்கப்படுகிறது.
2025 உகாதி எப்போது?
அந்த வகையில் இந்த ஆண்டு உகாதி பண்டிகை மார்ச் 30ஆம் தேதி வருகிறது. மேலும், பிரதிபத திதி மார்ச் 29, 2025 அன்று மாலை 04:27 மணிக்கு தொடங்கி மார்ச் 30, 2025 அன்று மதியம் 12:49 மணிக்கு நிறைவடைகிறது.
உகாதி என்பது மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. இந்த நாளில் குடும்பத்தினரும் நண்பர்களும் ஒன்று கூடி பரிசுகள், இனிப்புகள் பரிமாறிக் கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 2125ல் ஏலியன்கள் இந்த நாட்டுக்கு வருவார்கள்: பாபா வங்கா கணிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com