36 சதவீத கமிஷன் அரசியல்.. தி.மு.க.வை சூசகமாக விமர்சித்த மாணிக்கம் தாகூர்?

Manickam Tagore : தமிழக அமைச்சரவையில் 59 ஆண்டுகளுக்கு பின்னர் காங்கிரஸ் பங்கேற்கிறது. இது அக்கட்சி தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Published on: May 15, 2026 at 8:10 pm

விருதுநகர், மே 15, 2026: காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், “2026 தேர்தலுக்கு முன்பே திமுக “ஆட்சியில் பங்கு தமிழகம் ஏற்காது என்று வெளிப்படையாக அறிவித்தது.
அதற்கு மக்கள் தங்களின் தீர்ப்பை வழங்கிவிட்டார்கள். தமிழக மக்கள் ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்று கூறிவிட்டனர்.

ஒரு புதிய வரலாறு எழுதப்படுகிறது.

கூட்டணி கட்சிகளுக்கு என்றும் அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்று கூறிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது வாக்குறுதியை காப்பாற்றியுள்ளார். தற்போது, 59 ஆண்டுகளுக்குப் பிறகு, கதர் அணிந்த இரு காங்கிரஸ் அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம்பிடிக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களுக்கு இது உணர்ச்சிபூர்வமான, வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்றும் 36% கமிஷன் அரசியலிலிருந்து, ஊழல் இல்லா ஆட்சிக்குத் தமிழகத்தை கொண்டு செல்ல வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றம்.. புதிய பொறுப்பு என்ன? முழு விவரம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com