Savukku Shankar: பிரபல youtuber சவுக்கு சங்கர் வீட்டுக்குள் புகுந்து கழிவுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Savukku Shankar: பிரபல youtuber சவுக்கு சங்கர் வீட்டுக்குள் புகுந்து கழிவுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Published on: March 27, 2025 at 4:14 pm
Updated on: March 27, 2025 at 11:24 pm
சென்னை மார்ச் 27, 2025: பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர் சென்னை கீழ்பாக்கத்தில் ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். இந்த வீட்டில் மார்ச் 24ஆம் தேதி கும்பலாக சிலர் உள்ளே நுழைந்து கழிவுகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள். சவுக்கு சங்கரின் பெட்ரூம் வரை கழிவுகள் கொட்டப்பட்டதாக புகார்கள் எழுந்தன. தூய்மை பணியாளர்கள் என்ற போர்வையில் சுமார் 20க்கும் மேற்பட்ட கும்பல் உள்ளே நுழைந்து இந்த தாக்குதலை நடத்தியது.
மேலும் வீட்டுக்குள் இருந்த சவுக்கு சங்கரின் தாயார் மிரட்டப்பட்டார். இந்த விவகாரம் குறித்து சவுக்கு சங்கரின் தாயார் கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த டிஜிபி சங்கர் சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி போலீசார் வசம் உள்ளது; இந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் இது தொடர்பாக 6 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில் இந்த வழக்கில் தொடர்புடையதாக தேவி மற்றும் பாரதி என இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர். அதேபோல் விஜய், செல்வா மற்றும் கல்யாணகுமார் என மூன்று பேரும் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஐந்து பேரும் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இந்த ஐந்து பேருக்கும் சிபிசிஐடி நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதை எடுத்து அவர்கள் ஐந்து பேரும் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சில நபர்களை சிபிசிஐடி போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். சவுக்கு சங்கர் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு இருந்தனர். அதில் எந்த விவகாரத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 17 வயது சிறுமிக்கு காதல் தொல்லை.. மண்ணெண்ணெய் ஊற்றி எரிப்பு.. எட்டயபுரத்தில் பயங்கரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com