Edappadi Palaniswami Press meet | திமுகவும் பாரதிய ஜனதா கட்சியும் மறைமுக கூட்டணியில் உள்ளன என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.
Edappadi Palaniswami Press meet | திமுகவும் பாரதிய ஜனதா கட்சியும் மறைமுக கூட்டணியில் உள்ளன என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.
Published on: October 29, 2024 at 4:32 pm
Edappadi Palaniswami Press meet | அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் 171 நலிந்த நிலை தொழிலாளர்களுக்கு ரூ.1.71 கோடிக்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இந்நிகழச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழச்சாமி அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் 9 விளையாட்டு திடல்களை தனியார்மயமாக்கும் முடிவு கண்டிக்கத்தக்கது. கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன்கூட்டியே ஊதியம் வழங்க வேண்டும். என்றார்.
பின்னர்,தவெக உடன் கூட்டணி குறித்த கேள்விக்கு, ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கும். விஜய் தனது கருத்தை கூறியிருப்பது அவரது சுதந்திரம். தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கிறது. விஜய் கட்சியுடன் கூட்டணி குறித்து தேர்தல் நெருங்கும்போது பேசுவதுதான் சரியாக இருக்கும். எம்.ஜி.ஆர் பெயரை சொன்னால்தான் அரசியல் செய்ய முடியும் என்ற சூழல் நிலவுகிறது என்றார்.
இதையும் படிங்க திமுக சின்னம் பொறித்த டி-ஷர்ட்; உதயநிதி ஆடை விவகாரம்: அரசு பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com