Health | பிரசவ கால ஈரம் மற்றும் தொற்றை தவிர்ப்பது எப்படி? என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
Health | பிரசவ கால ஈரம் மற்றும் தொற்றை தவிர்ப்பது எப்படி? என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
Published on: October 29, 2024 at 4:05 pm
Updated on: October 29, 2024 at 4:09 pm
Health | பொதுவாக பெண்கள் கர்ப்ப காலத்தில் சில பிரச்சனைகளை சந்திப்பதுண்டு. பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஈரம், அசௌகரியம் மற்றும் தொற்றுநோயைத் தவிர்க்கவும் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான கர்ப்பப் பயணத்தை உறுதிசெய்யவும் எளிமையான 5 எளிய வழிமுறைகள் உள்ளன.
பிறப்புறுப்பை சுத்தமாக வைத்தல்
கர்ப்ப காலத்தில் உடல் எடை அதிகரிப்பதால் சோர்வு ஏற்படுகிறது. இதனால் பிறப்புறுப்பின் ஆரோக்கியத்தை கவனிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. யோனி வெளியேற்றத்தால் ஈரப்பதம் மற்றும் அசவுகரிய நிலை ஏற்படுகிறது. இந்த பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற வாசனை இல்லாத சோப்பினை பயன்படுத்தலாம். மேலும் அடிக்கடி கழுவி சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்த பின்னர் துணியை பயன்படுத்தி பிறப்புறுப்பை உலர்த்த வேண்டும். இதன் மூலம் தொற்று பாதிப்பை தடுக்க முடியும்.
வியர்வையை தடுக்க பேண்டி லைனர் அணியவும்
அடிக்கடி வியர்க்காமல் இருக்க கர்ப்பிணி பெண்கள் பேண்டி லைனரை பயன்படுத்தலாம். இது பிறப்புறுப்பு பகுதியை வறண்ட நிலையில் வைத்திருக்கும்.
பிறப்புறுப்பு முடியை நீக்குதல்
கர்ப்பிணி பெண்களுக்கு பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்பு மற்றும் அசௌகரியத்தை நீக்க அந்தரங்க முடியை நீக்க வேண்டும். இது தொற்று, அரிப்பு மற்றும் ஒவ்வாமை ஆகியவற்றை தடுக்கிறது.
இறுக்கமான ஆடைகளை தவிர்க்கவும்
கர்ப்பிணி பெண்களின் எடை அதிகரிப்பதால் ஆடைகளின் அளவு மாறிக்கொண்டே இருக்கும். எனவே இறுக்கமான ஆடைகள் தவிர்த்து காற்றோட்டமான கர்ப்பிணிகளுக்கான உடைகளை அணிய வேண்டும். இது சருமத்திற்கும் நிதானமான சுவாசித்தலுக்கும் மற்றும் உடலுக்கும் ஆறுதல் அளிக்கும்.
சிறுநீர் கழித்த பின் சுத்தம் செய்தல்
ஒவ்வொரு முறை சிறுநீர் கழித்த பிறகு பிறப்புறுப்பை நீரால் கழுவி சுத்தம் செய்து துடைத்து உலர விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அரிப்பு மற்றும் தொற்று வராமல் பாதுகாக்கலாம். இருப்பினும் எந்த ஒரு தீர்வையும் ஏற்றுக் கொள்வதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசிப்பது சிறந்தது.
இதையும் படிங்க : தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பது எப்படி? இந்த 6 டிப்ஸ்-ஐ ஃபாலோ பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com