Health | தாய்மார்கள் தங்களின் பச்சிளம் குழந்தைக்கு தேவையான தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் வழிகள் இங்குள்ளன.
Health | தாய்மார்கள் தங்களின் பச்சிளம் குழந்தைக்கு தேவையான தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் வழிகள் இங்குள்ளன.
Published on: October 28, 2024 at 3:42 pm
Health | பெரும்பாலான தாய்மார்களுக்கு தங்கள் குழந்தைக்கு தேவையான ஊட்டமளிக்க போதுமான அளவு தாய்ப்பால் சுரக்கிறது. ஆனால் சில தாய்மார்களுக்கு பற்றாக்குறை ஏற்படுவது பிரச்சினையாக உள்ளது. இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபட சில வழிமுறைகளை பார்க்கலாம்.
சரியான நேரத்திற்கு ஏற்ப தாய்ப்பால் கொடுத்தல்
பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பதற்காக மிகச் சிறந்த வழி என்னவென்றால் 2 முதல் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இவ்வாறு நேரம் தவறாமல் முறையாக தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்ப்பால் சுரப்பை தூண்டுகிறது.
மார்பக சுருக்கம்
குழந்தைக்கு பாலூட்டும் தருணத்தில் மார்பகங்களை மெதுவாக அழுத்தம் கொடுக்க வேண்டும். இது குழந்தைக்கு பாலூட்டும் போது அதிக பால் சுரக்க உதவுகிறது.
மார்பக பம்பு
குழந்தைக்கு பாலூட்டும் தருணத்தை தவிர மற்ற நேரங்களில் மார்பக பம்பை பயன்படுத்தி தாய்ப்பால் எடுக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் தாய்ப்பால் உற்பத்தி அதிகரிக்கிறது.
தண்ணீர் குடித்தல்
பாலூட்டும் தாய்மார்கள் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் இது தாய்ப்பால் சுரப்பரை அதிகரிக்கிறது. மேலும் புரதம் நிறைந்த உணவுகள், முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளடக்கிய நன்கு சமநிலையான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். ஓட்ஸ் மற்றும் வெந்தயம் போன்றவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
நேர்மறை எண்ணங்கள்
மன அழுத்தம் பால் சுரப்பை குறைக்கிறது. எனவே மன அழுத்தத்தை குறைக்க சுவாசப் பயிற்சி தியானம் மற்றும் சிறிய உடற்பயிற்சியில் ஈடுபடலாம். இது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி அளிப்பதோடு மன அழுத்தத்தை நீக்கும்.
தூக்கம்
தாய்ப்பால் உற்பத்திக்கு ஓய்வு மற்றும் தூக்கம் அவசியம். போதுமான நேரம் தூங்குவதன் மூலம் தாய்ப்பால் உற்பத்தி அதிகரிக்கிறது. தாய் பால் உற்பத்தி என்பது படிப்படியாக அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த செயல்முறை ஒவ்வொருவரின் உடல் நிலைக்கு ஏற்ப மாறுபடுகிறது. எனவே எந்த ஒரு தீர்வையும் ஏற்றுக் கொள்வதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசிப்பது சிறந்தது.
இதையும் படிங்க : கொய்யா இலை சாப்பிட்டா உடல் எடை குறையுமா? உண்மை என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com