24 மணி நேரம் கெடு.. கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Kharge Over PM Remark : காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Published on: April 22, 2026 at 10:48 pm

சென்னை, ஏப்.22, 2026: பிரதமர் நரேந்திர மோடியை ‘பயங்கரவாதி’ என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே விமர்சித்து இருந்தார். இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.
இது தொடர்பாக மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் இன்று (புதன்கிழமை) ‘கடுமையான நோட்டீஸ்’ அனுப்பியதுடன், 24 மணி நேரத்திற்குள் தனது நிலைப்பாட்டை விளக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக பாஜக அளித்த புகாரை தேர்தல் ஆணையம் பெற்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரான கார்கே மீது, இந்தக் கருத்து தொடர்பாக பாஜகவின் உயர்மட்டக் குழு தேர்தல் ஆணையத்திடம் முறைப்படி புகார் அளித்திருந்தது.

மேலும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ‘இழிவான வார்த்தைகளைப்’ பயன்படுத்தியதற்காக, கார்கேவும் காங்கிரஸும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ராகுலுக்கு செக் வைத்தது யார்? மம்தா? தேர்தல் ஆணையம்.. பரபரப்பு தகவல்கள்!

இந்தியாவில் சாலை விபத்து மரணங்கள் 3.5% அதிகரிப்பு.. மக்களவையில் அமைச்சர் எழுத்துப்பூர்வ பதில் India Road Fatalities Rise

இந்தியாவில் சாலை விபத்து மரணங்கள் 3.5% அதிகரிப்பு.. மக்களவையில் அமைச்சர் எழுத்துப்பூர்வ பதில்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com