ஆசிய கிரிக்கெட் போட்டி : இந்திய ஆண்கள், மகளிர் அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதி

Asian Games: நடப்பு சாம்பியன்களான இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள், ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டி டி20 தொடரில் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

Published on: July 25, 2026 at 1:32 pm

ஐச்சி, ஜூலை 25, 2026: ஜப்பானின் ஐச்சி மாகாணத்தில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டி டி20 கிரிக்கெட் தொடரில், நடப்பு சாம்பியன்களான இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் அணிகள் நேரடியாக காலிறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இந்தியாவுடன் பாகிஸ்தான் ஆண்கள் மற்றும் மகளிர் அணிகளுக்கும் காலிறுதியில் நேரடி இடம் வழங்கப்பட்டுள்ளது.

கொரோகி அத்லெடிக் பார்க் மைதானத்தில் நடைபெறும் இந்தத் தொடரில், மகளிர் டி20 போட்டிகள் செப்டம்பர் 17 முதல் 22 வரை நடைபெறவுள்ளன. ஆண்கள் டி20 தொடர் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 1 வரை நடைபெற உள்ளது.

ஆண்கள் பிரிவில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் குரூப் A-வில் ஆப்கானிஸ்தான், ஜப்பான், நேபாளம் ஆகிய அணிகளும், குரூப் B-வில் ஹாங்காங் சீனா, மலேசியா, ஓமன் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. இந்தக் குழு ஆட்டங்கள் முடிவில் வெற்றி பெறும் அணிகள் காலிறுதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட முன்னணி அணிகளை எதிர்கொள்ளும்.

இந்திய ஆண்கள் அணிக்கு ஸ்ரேயஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மகளிர் அணியை ஹர்மன்ப்ரீத் கவுர் வழிநடத்துகிறார். கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணிகள், இந்த முறையும் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் களமிறங்குகின்றன.

இதையும் படிங்க : அவன் பயத்துக்கே பயம் காட்டுறவன்.. வைபவ் சூர்யவன்ஷி குறித்து ஷ்ரேயாஸ ஐயர்

தென்கொரியாவில் கோல்ஃப் சாம்பியன் பட்டம் வென்ற யூரி யோஷிடா.. எல்பிஜிஏ தொடரில் ஜப்பானுக்கு 4-வது வெற்றி!
Yuri Yoshida Golf Victory

தென்கொரியாவில் கோல்ஃப் சாம்பியன் பட்டம் வென்ற யூரி யோஷிடா.. எல்பிஜிஏ தொடரில் ஜப்பானுக்கு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com