அசாமில் வெள்ளப் பாதிப்பு தீவிரம்: பலி எண்ணிக்கை 61 ஆக உயர்வு

Assam Floods: அசாமில் வெள்ளம் மேலும் மோசமடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.

Published on: July 25, 2026 at 2:04 pm

கவுகாத்தி, ஜூலை 25, 2026: அசாம் மாநிலத்தில் வெள்ளப் பாதிப்பு தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. மாநிலம் முழுவதும் 1.15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சிவசாகர், சராய்டியோ, ஜோர்ஹாட் மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அண்மையில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி, வெள்ளம் தொடர்பாக மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சராய்டியோ மாவட்டத்தில் 7 பேரும், சிவசாகர் மாவட்டத்தில் 6 பேரும், ஜோர்ஹாட் மாவட்டத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் அசாமில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், திகோ, திசாங்), தன்சிரி உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து அபாய அளவுக்கு மேல் பாய்ந்து வருவதால், மேல் அசாம் பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு மேலும் மோசமடைந்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பேரிடர் மீட்புப் படையினர், மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு அரசு அமைப்புகள் இணைந்து சிக்கித் தவிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுதல், நிவாரணப் பொருட்கள் வழங்குதல் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. மாநில அரசு நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : மேகதாது அணை விவகாரம்: தமிழக முதல்வர் விஜயுடன் பேச்சு? டி.கே. சிவகுமார் சூசக பதில்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com