சர்வதேச துப்பாக்கிச் சுடுதல்.. தங்கம் வென்ற இந்தியா.. நர்வால் அசத்தல்!

Narwal Clinches 10m Gold : சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு (ஐ.எஸ்.எஸ்.எஃப்) ஜூனியர் உலகக் கோப்பையில் ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் ஷிவா நர்வால் தங்கம் வென்றார்.

Published on: April 22, 2026 at 10:24 pm

கெய்ரோ, ஏப்.22, 2026: எகிப்தின் கெய்ரோவில் செவ்வாய்க்கிழமை (ஏப்.21, 2026) நடைபெற்ற சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு (ஐ.எஸ்.எஸ்.எஃப்) ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பை 2026 போட்டியின் தொடக்க நாளில், ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் ஷிவா நர்வால் தங்கப் பதக்கத்தை வென்றார்.

நர்வால் 241.8 புள்ளிகளுடன், உஸ்பெகிஸ்தானின் சோடிக்ஜான் அப்துல்லாயேவை விட சற்றே முன்னிலையில் போட்டியை நிறைவு செய்தார். அதே பிரிவில் சக இந்திய வீரரான சிராக் சர்மா வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.

இந்த நிலையில், மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப் போட்டியில் பனாஹ் புகரா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
முதல் நாளில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் வென்றதன் மூலம், இந்த ஜூனியர் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் ஆரம்பகட்ட பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்தது.

இது நாட்டின் இளம் வீரர்களுக்கு ஒரு நம்பிக்கையூட்டும் பயணத்தைக் குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மரடோனா மரணம்.. மருத்துவ அலட்சியம் காரணமா? மகள் பரபரப்பு புகார்!


திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com