Dr Ramadoss | ஆசிரியர்கள் போராடும் நிலை அரசுக்கு அவலம் என மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
February 6, 2025
Dr Ramadoss | ஆசிரியர்கள் போராடும் நிலை அரசுக்கு அவலம் என மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
Published on: September 4, 2024 at 7:53 pm
Updated on: September 4, 2024 at 7:54 pm
Dr Ramadoss | “ஆசிரியர்கள் போராடும் நிலை நிலவுவதே அரசுக்கு அவலம்தான்” என பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மருத்துவுர் ராமதாஸ் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “அழியாச் செல்வமான கல்வி வழங்கி நாட்டின் முன்னேற்றத்திற்கு காரணமாகத் திகழும் ஆசிரியர்கள் நாளை கொண்டாடும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
மேலும், “ஆசிரியர்களுக்கு உரிமைகள் தான் வழங்கப்படவில்லை என்றால், அவ்வாறு வழங்கப்படாததைக் கண்டித்து போராடக்கூட அவர்களால் முடியவில்லை. கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற மறுக்கும் அரசு, அதற்காக குரல் கொடுக்கும் ஆசிரியர்களை கைது செய்து கொடுமைப்படுத்துகிறது.
ஆண்டுதோறும் போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள் கைது செய்யப்படுவதும், கட்டாயப்படுத்தி பேருந்துகளில் ஏற்றப்பட்டு ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவதும், உண்ணாவிரதம் இருந்து மயங்கி விழுந்தாலும் மனிதநேயமின்றி வேடிக்கைப் பார்க்கும் அவலமும் அரங்கேற்றப்பட்டு வருகிறது.
ஆசிரியர்கள் போராடும் நிலை நிலவுவதே அரசுக்கு அவலம் தான். அவ்வாறு போராடியும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு மறுப்பது பேரவலத்தின் சான்று ஆகும். தமிழ்நாட்டில் கல்வித்தரம் குறைவதற்கு ஆசிரியர்கள் போற்றப்படாமல் அவமதிக்கப்படுவதும் காரணம் என்பதை அரசு உணர வேண்டும்.
அனைவரின் உயர்வுக்கும் காரணமான ஆசிரியர்கள் எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கும் வகையில் அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டால் தான் அவர்களால் மிகச்சிறந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்க முடியும். வேண்டும்.
இதை உணர்ந்து ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப் பட்டு, அதன் மூலம் அவர்களின் குறைகளும், கவலைகளும் களையப்பட வேண்டும் என்று கூறி, இந்த நாளில் ஆசிரியர் பெருமக்களுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க தமிழ்நாட்டில் சரியும் நெல் கொள்முதல் அளவு: மருத்துவர் ராமதாஸ் வேதனை
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com