முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பிணை வழங்கப்பட்ட நிலையில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பிணை வழங்கப்பட்ட நிலையில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
Published on: September 26, 2024 at 2:09 pm
K Veeramani | “முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பிணை தீர்ப்பு, வரவேற்கப்படக் கூடிய மனித உரிமைக்கான சட்டத் தீர்ப்பு” என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “மேனாள் அமைச்சர் செந்தில்பாலாஜிமீது ஒன்றிய அரசின் அமலாக்கத் துறை போட்டுள்ள வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் அவருக்கு 470 நாள்களுக்குப் பிறகு உச்சநீதிமன்றம் பிணை (ஜாமீன்) வழங்கியிருக்கிறது.
பொதுவாக உச்சநீதிமன்றத்தின் பல பிணை வழக்குத் தீர்ப்புகளில், பிணை வழங்குவதில், ஒரு பொது சட்ட மரபு, முன்மாதிரிகளும் எப்போதும், ‘‘பிணை என்பது விதி, சிறை என்பது ஒரு விதிவிலக்கு’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இவரது வழக்கில் இவருக்கு இப்போதுதான் நீதி வழங்கப்பட்டு இருப்பது, தாமதித்து வழக்கப்பட்டிருக்கிறது என்றாலும், தவறக்கூடாத சிறப்பான தீர்ப்பு இது!
இதில் அமலாக்கத் துறையின் அதீதமான போக்கினையும் ஒதுக்கி, நியாயம் கிடைத்துள்ளது, வரவேற்கப்படவேண்டிய ஒன்றாகும். ஒரு சில நிபந்தனைகளுடன் பிணை கொடுக்கப்பட்டு, சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார்.
மனித உரிமைக் கண்ணோட்டத்தில் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கிய தீர்ப்பு இது!
நமது அரசமைப்புச் சட்டம் வாழுகிறது இதன்மூலம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ரூ.100 கோடி ஊழல் புகார்; சஞ்சய் ராவத்துக்கு 15 நாள் சிறை: மும்பை நீதிமன்றம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com