Fixed deposit | செப்டம்பர் மாதத்தில் 5 வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை திருத்தியுள்ளன.

February 19, 2025
Fixed deposit | செப்டம்பர் மாதத்தில் 5 வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை திருத்தியுள்ளன.
Published on: September 26, 2024 at 2:45 pm
Fixed deposit | இந்தியா போன்ற வளரும் நாடுகளில் முதலீட்டாளர்கள் பெரும்பாலும் ஃபிக்ஸட் டெபாசிட் போன்ற பாதுகாப்பான முதலீடு திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். அதிகளவு ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள் பெரும்பாலும் இந்தத் திட்டங்களில்தான் முதலீடு செய்வார்கள்.
இதனால், இந்தியாவில் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு அதிகளவு காணப்படுகிறது.இந்த நிலையில், செப்டம்பர் மாதத்தில் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை திருத்திய 5 வங்கிகள் குறித்து பார்க்கலாம்.
ஃபெடரல் வங்கி
ஃபெடரல் வங்கி 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் பொதுக் குடிமக்களுக்கு 3% முதல் 7.40% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. மேலும், மூத்த குடிமக்களுக்கு, வங்கி 3.5% முதல் 7.90% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த வட்டி விகிதங்கள் செப்டம்பர் 16, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.
பேங்க் ஆஃப் பரோடா
பேங்க் ஆஃப் பரோடா, 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான பொதுக் குடிமக்களுக்கு 4.25% முதல் 7.30% வரை நிலையான வைப்பு வட்டி விகிதங்களை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு, வங்கி 4.75% முதல் 7.80% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த வட்டி விகிதங்கள் செப்டம்பர் 5, 2024 முதல் அமலக்கு வந்துள்ளன.
ஆக்ஸிஸ் வங்கி
ஆக்சிஸ் வங்கி 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான பொதுக் குடிமக்களுக்கு 3% முதல் 7.25% வரை நிலையான வைப்பு வட்டி விகிதங்களை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு, வங்கி 3.5% முதல் 7.75% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த வட்டி விகிதங்கள் செப்டம்பர் 10, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.
கர்நாடகா வங்கி
கர்நாடகா வங்கி 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான பொதுக் குடிமக்களுக்கு 3.5% முதல் 7.50% வரை நிலையான வைப்பு வட்டி விகிதங்களை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு 7 நாட்கள் முதல் 1 வருடம் வரை, மற்றும் 1 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை பொது விகிதத்திற்கு மேல் 0.50% கூடுதல் வட்டி விகிதங்கள் கிடைக்கும்.
இண்டஸ்இந்த் வங்கி
இண்டஸ்இந்த் வங்கி, 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான பொதுக் குடிமக்களுக்கு 3.5% முதல் 7.99% வரை நிலையான வைப்பு வட்டி விகிதங்களை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு, வங்கி 4% முதல் 8.25% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த வட்டி விகிதங்கள் செப்டம்பர் 11, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.
இதையும் படிங்க : 6 மாதம் ஃபிக்ஸட் டெபாசிட்; 6.75% வரை வட்டி: இந்த வங்கிகளை செக் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com